முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரதி காண விரும்பிய பாரத சமுதாயம் - கட்டுரை

பாரதி காண விரும்பிய பாரத சமுதாயம் குறித்துக் கட்டுரை வரைக.


முன்னுரை

கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர், சமூக சீர்திருத்தவாதி என்ற பன்முக ஆளுமை கொண்டவர் மகாகவி பாரதியார். தாய்நாட்டின் மீதும் தாய்மொழி மீதும் அளவற்ற பற்று கொண்டவர். பாரத நாட்டின் மீதான அவரது கனவு அளப்பரியதாக இருந்தது. தேசிய விடுதலையோடு நாட்டின் பல்வேறு சிக்கல்களும் தீரும்படியான ஒப்பற்ற கனவு பாரதம் பாரதியாருக்கு இருந்தது. தனது கனவை 'பாரத சமுதாயம்' என்ற கவிதையில் அழகுற வெளிப்படுத்துகிறார் அவர்.

பொதுவுடைமைச் சமுதாயம்

பாரதி காண விரும்பிய பாரத சமுதாயம், பாரதியார் கட்டுரை, பாரதியார் சிந்தனைகள்
பாரதியார்

தான் காண விரும்பிய பாரத சமுதாயம் இந்த உலகத்துக்கு ஒரு முன்மாதிரியாக, புதுமையாகத் திகழ வேண்டும் என்று விரும்பினார் பாரதியார். அந்தச் சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயம் என்பதே அவரது கனவு.

"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை"

பாரத நாட்டில் எல்லோரும் சமம்; எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; ஒப்பில்லாத சமுதாயமாக பாரத சமுதாயம் திகழ வேண்டும் என்பது பாரதியாரின் விருப்பமாக இருந்தது.

புதிய பாரதம்

'இனி இந்த பாரத நாட்டில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லை. ஒருவரையொருவர் ஏமாற்றிப் பிழைக்கும் வழக்கமும் இனி இல்லை புதிய பாரதம் புதிய சமுதாயமாக மாற வேண்டும்' என்னும் சமதர்மக் கொள்கையைத் தன் பாடல் வரிகள்வழி பாரதியார் வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ? - நம்மில் அந்த
வாழ்க்கை இனி உண்டோ?"

என்று புதிய பாரதம் குறித்த கனவை மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்துகிறார்.

வளமான பாரதம்

நம் பாரத நாடு வளமான நாடு. அழகிய சோலைகளும் நெடிய வயல்களும் நிறைந்த நாடு நம் பாரதநாடு. வளமான கனிகளும் கிழங்கு வகைகளும் தானியங்களும் கணக்கின்றி விளையும் நாடு நம் பாரத நாடு. இந்த வளமும் செழிப்பும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பது அவரது பாரத சமுதாயம் குறித்த கனவுகளில் ஒன்றாகும்.

பிரபல கட்டுரைகள்

பாரதத்தின் புதிய கொள்கை

பாரதியார் புதிய பாரத சமுதாயம் படைக்க புதிய கொள்கை ஒன்றை அழுத்தமாகக் கூறுகிறார். பாரத நாட்டின் ஒவ்வொரு மனிதனும் ஏழ்மையிலும் பசியிலும் வாடக் கூடாது என்பது அவரது உறுதியான முடிவாகும்.

"இனியொரு விதி செய்வோம் அதை
எந்தநாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்"

பாரதம் மட்டுமன்றி, இந்த உலகில் தனி ஒரு மனிதன் உணவில்லை என்று பசித்து வாடினாலும் இந்த உலகம் அழிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாகக் கூறுகிறார். அவர். அவர் காண விரும்பிய புதிய பாரதம் அதுவேயாகும்.

ஆன்மீக பாரதம்

பாரதம் ஆன்மீக உணர்வு மிகுந்த நாடு. இறை நம்பிக்கை மிகுந்த நாடு. தெய்வீகம் நிறைந்த நாடு "எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்" என்பது இறைத் தத்துவம். தெய்வீகத் தன்மையை அனைவரும் கொண்ட நிலையை இந்த உலகிற்கு இந்தியா உணர்த்தும் நிலை வரும். அதுவே தான் காண விரும்பிய புதிய பாரதம் என்கிறார் பாரதியார்.

வேற்றுமையில் ஒற்றுமை

மக்கள் அனைவரும் மன அமைதியுடன் வாழ்ந்து, இறைவனை அடைகின்ற வழியை இந்தியா இந்த உலகிற்கே கற்றுக் கொடுக்கும். ஏனெனில் இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. சாதி, மதம், இனம் என வெவ்வேறாக இருப்பினும் மனதளவில் இங்கு வாழும் அனைவரும் ஒன்றே. இதையே பாரதியார்,

"எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்"

என்று புதிய சமதர்மக் கொள்கையாக அறிவிக்கிறார்.

பாரத நாட்டில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சுதந்திர மனப்போக்குடன் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் மனநிலை கொண்டவர்களாக, ஒவ்வொருவரும் தங்களை மன்னர்களாக எண்ணி வாழ வேண்டும் என்று சூளுரைக்கிறார்.

முடிவுரை

'பாரத சமுதாயம்' என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் பாரதியார் புதிய பாரதம் குறித்த தனது கனவை அழகுற வெளிப்படுத்துகிறார். அத்தகைய புதிய பாரத நாட்டில் வாழும் மக்களை 'வாழ்க வாழ்க' என்று வாழ்த்துகிறார். தான் காண விரும்பிய பாரத சமுதாயம் என்றென்றும் வெற்றிப் பாதை நோக்கியே செல்லும் என்று உறுதியாக நம்பினார் பாரதியார்.

"பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க! வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய! ஜய! ஜய!" 

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...