அறிமுகம்
ஹைக்கூ என்பது
புனைவு இலக்கியமல்ல
அது உணர்வு இலக்கியம்”
ஹைக்கூ வடிவம் ஜப்பான் மொழியின்மூலம் தமிழுக்குக் கிடைத்தது. நம்மிடையே அதிகம் அறிமுகமாகி வருவதும் மாற்றான் தோட்டத்து மல்லிகைதான். எனினும், 'மலர் மணமே தேவை' என்பது பாமர மக்களின் ரசனையான மனநிலை. ஒவ்வொரு ஹைக்கூவையும் விளங்க அல்லது விளங்கிக்கொள்கிற முயற்சியில் பிறக்கிற வரிகள்கூட அர்த்த புஷ்டியோடு மிளிர்கின்றன. பல வருடங்களுக்கு முன் வெளிவந்த ஒரு ஆங்கில நாளிதழில் பாஷோ என்ற மேதை சில ஹைக்கூக்களை எழுதுவதற்கு இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார் என்ற செய்தியை 'ஹைக்கூ வரலாறு'என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது ஹைக்கூ என்பதற்குக் கிளிஞ்சல் என்று பொருள். ஒவ்வொரு கிளிஞ்சலிலும் கடலும் ஒளிந்திருக்கிறது. கடல் பற்றிய எண்ணங்கள் கடலின் அனுபவங்கள் கிளிஞ்சலின் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. கிளிஞ்சல்கள் கடல் தள்ளிய அபரிமிதங்கள் அல்லது உபரிகள். ஒரு கிளிஞ்சலைக் காதுக்குள் வைத்தால் கடலின் ஓசை தெரிவது போல ஒரு ஹைக்கூவில் வாழ்வின் ஆழத்தை அறிந்து கொள்ளலாம்.
ஹைக்கூக் கவிதைகள் பத்து அல்லது பதினொரு சொற்களுக்குள் எழுதப்படுகின்றன. இளங்கவிஞர்களுக்கு இவை சிறந்த வரமாக விளங்குகின்றன. தலைப்பைக் கொண்டு பொருள் உணரப்படுமாறு கவிதைகள் உள்ளன.

கருத்துகள்
கருத்துரையிடுக