முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணிமேகலை – நூலமைப்பும் கதையமைப்பும் | இலக்கிய சிறப்புகள் விளக்கம்

நூலமைப்பு

மதுரை கூலவணிகன் சீத்தலைச்சாத்தனார் எனும் பௌத்த சமயத்தார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் மணிமேகலை காப்பியத்தை இயற்றியுளளார். தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியமான மணிமேகலை 4286 அடிகளில் 30 காதைகளாக அமைந்துள்ளது. காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்துள்ள இந்நூல் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியே என்பார்கள். மாதவியின் மகள் மணிமேகலையை அருந்தவப்படுத்தும் முயற்சியே மணிமேகலை காப்பியத்தின் நோக்கமாகும். மணிமேகலை மூலக்கதையோடு தொடர்புடைய 100 கதைகளில் 72 புராணக் கதைகளும் 22 வரலாற்றுக் கதைகளும் 06 நாட்டுப்புறக் கதைகளும் இடம்பெற்றுள்ளன என்கிறார்கள்.


கதையமைப்பு

பெண்ணின் பெயரில் அமைந்த முதல் காப்பியம். கோவலன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தியறிந்த மாதவியும் மணிமேகலையும் பௌத்த சமயத் துறவியானார்கள். புத்த பிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் நுழைந்த மணிமேகலை மீது காதல் கொண்ட உதயகுமாரன் அவளைப் பின் தொடர்ந்தான். தன்னைப் பொருள் விளையாட்டி என்று இகழ்ந்து பேசினாலும் உதயகுமாரனின் பின் தன்மனம் செல்வதை நினைத்து மணிமேகலை வருந்துகிறாள். இந்நிலையில் மணிமேகலா எனும் தெய்வம், மணிமேகலையை மணிப்பல்லவத் தீவிற்கு அழைத்துச் சென்றது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து மூன்று மந்திரங்களை மணிமேகலை தெரிந்து கொள்கிறாள்.

மணிமேகலை, நூலமைப்பு, கதையமைப்பு, மணிமேகலை சிறப்புகள், சங்க கால இலக்கியம், தமிழ் காவியங்கள்


கோமுகி பொய்கையில் இருந்த ஆபுத்ரனின் அமுதசுரபி மணிமேகலைக்குக் கிடைக்கிறது. தன் மந்திரத்தின் உதவியால் விண்ணகத்தில் பறந்து புகார் நகரை மணிமேகலை அடைந்தாள். அங்குப் பசியால் வாடியோர்க்கு உண்டிகொடுத்து உயிர்கொடுத்தாள். உதயகுமாரன் தரும் துன்பங்களைத் தன் மந்திரத்தின் உதவியால் நீக்க காயசண்டிகையாக மணிமேகலை வடிவம் எடுத்தாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமாரன் தவறுதலாகக் கொல்லப்பட்டான். 

அரசனின் மகனைக் கொன்றதாகக் காரணம் கூறி மணிமேகலையைச் சோழ அரசன் சிறையில் அடைத்தான். மகனைப் பறிகொடுத்த அரசி மணிமேகலைக்குப் பலவகையில் துன்பம் கொடுத்தாள். தனது தவவலிமையால் மணிமேகலை சிறையில் இருந்து விடுபடுகிறாள். உண்மையை உணர்ந்த அரசி தன்னை மன்னிக்குமாறு வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கையைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசிபெறுகிறார் எனக் கதை முடிகிறது.


மணிமேகலை எழுந்த சூழல்

சிலப்பதிகாரத்தின் இறுதி அடியை மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்று இளங்கோவடிகள் கூறியுள்ளதால் சிலப்பதிகாரத்தின் தொடர் நிகழ்வாகவே மணிமேகலை அமைந்துள்ளது என்று அறிய முடிகிறது. இளங்கோவடிகளும் மதுரைக் கூலவணிகன் சீத்தலைச் சாத்தனாரும் சமகாலத்தவர் என்பதால் இருவரும் கலந்துரையாடியே மணிமேகலையைச் சீத்தலைச்சாத்தனார் இயற்றியதாகக் கூறுகிறார்கள். கோவலன் மாதவி மகள் மணிமேலையின் குமரிப் பருவம் முதல் புத்தசமய தவநிலை போராட்டங்கள் வரை அனைத்து நிகழ்வுகளையும் விளக்குவதாக நூல் அமைந்துள்ளது. மணிமேகலை நூல் அரங்கேற்றத்தின் போது இளங்கோவடிகள் அருகமர்ந்து கேட்டார் என்பதை


"இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப
வளங்கெழ கூலவாணிகன்சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறுஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்”


என்று மணிமேகலைப் தெளிவுபடுத்துகின்றன. பதிகம் 95-98ஆம் அடிகள் மணிமேகலை என்பதால் அப்பெயரையே தன் மகளுக்குக் கோவலன் கோவலன் குலதெய்வத்தின் பெயர் சூட்டியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிமேகலை கூறுவன

மணிமேகலையில் பண்டைத் தமிழகத்தின் வளத்தினையும் நாகரிகத்தையும் காண முடிகிறது. நகரங்களில் இருந்த வீடுகளில் இடம் பெற்றிருத்த கண்கவர் சிற்பங்களும் ஒவியங்களும் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக மணிமேகலை கூறியுள்ளது. மணிப்பல்லவம், சாவகம், இரத்தினதீவம், காஞ்சிநகர், வஞ்சிநகர், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய செய்திகளும் அங்கு நடைபெற்ற தொழில்களும் மணிமேகலையில் விளக்கப்பட்டுள்ளன.

சமயக் கொள்கைகளையும் ஆதிரை, விசாகை, மருதி ஆகிய பத்தினிப் பெண்களின் தகவல்களையும் மணிமேகலை காப்பியம் தெளிவுபடுத்தியுள்ளது. கணிகையர் குலப் பெண்கள் கலை வல்லுநர்களாக இருந்தாலும் குற்றம் செய்தால்! ஏழு செங்கற்களைத் தலையில் சுமந்து ஊரை வலம்வரும் தண்டனை அவர்களுக்கு வழக்கப்பட்டதாக மணிமேகலையில் அறிய முடிகிறது.

“அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல் எனக் காவலன் உரைக்கும்”

என்கிறது மணிமேகலை 25ஆம் காதையின் 228-231ஆம் அடிகள், மனித வாழ்க்கையில் இளமை, இன்பம், செல்வம், யாக்கை ஆகியன நிலையாமை எனக் கூறி அறம் செய்ய வேண்டும் என மணிமேகலைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பசியொழிப்பு, பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சாதியொழிப்பு, சிறையொழிப்பு ஆகியவற்றை மணிமேகலை வற்புறுத்துகிறது.


சிறப்புகள்

* தமிழ் இலக்கியங்களில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை.

* காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் மணிமேகலை.

* பரத்தையர் குலத்தைச் சேர்ந்த சித்ராபதியின் மகள் மாதவியின் மகளைக் காப்பியத் தலைவியாகக் கொண்ட நூல்.

* மடக்கணி, சிலேடையணியைப் பயன்படுத்தியுள்ள முதல் காப்பியம் என்ற பெருமை பெற்றுள்ள நூல்.

* தமிழ்த்தாயின் நடுநாயகமாக விளங்கும் இடையை அலங்கரிக்கும் அணிகலன் மணிமேகலை.

* மணிமேகலை காப்பியத்தில் சொல் ஓசையும் இலக்கிய நயமும் எளிமையாக அமைந்துள்ளது.

* எப்போதும் எவ்வுயிர்களிடத்தும் அன்பாய் இரு என்பது அரசமாதேவிக்கு மணிமேகலை கூறிய அறிவுரையாகும்.

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...