முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இம்பர் வான் by Veeraraghava Mudaliar

Text: வீரராகவ முதலியார் எழுதிய தனிப்பாடல் "இம்பர் வான் எல்லை இராமனையே பாடி..." பாடலின் வடிவம், அதன் கருத்து மற்றும் இலக்கிய முக்கியத்துவத்தை விளக்கும் பதிவு

Short Summary of Veeraraghava Mudaliar’s Poem: “Imbar Vaan Ellai Raamanaiye Paadi...”

Veeraraghava Mudaliar’s devotional poem “Imbar Vaan Ellai Raamanaiye Paadi...” is a deeply spiritual Tamil composition that emphasizes unwavering devotion to Lord Rama. The poet expresses that instead of singing praises of worldly kings or material achievements, one should sing only the glories of Lord Rama, who is eternal and divine. Through poetic grace and moral conviction, the poem urges readers to focus on bhakti (devotion), righteousness, and the ultimate goal of reaching the divine realm

ஆசிரியர் அறிமுகம்

அந்தகக் கவிஞரான வீரராகவ முதலியார் கண்பார்வையற்றவர் ஆவார். இவர் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள பூதூரில், வடுகநாதருக்கு மகனாகப் பிறந்தார். செவியறிவால் இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்தார். பார்வையற்றவராகப் பிறந்து, இளமையிலேயே கவி இயற்றும் ஆற்றல் பெற்றவராதலால் அந்தகக்கவி எனப்பட்டார். நகைச்சுவையாகவும் சிலேடையாகவும் பாடல் எழுதுவதில் வல்லவர். ஒருவர் மனதில் உள்ளதை மற்றொருவர் தன் மனதால் கண்டுணர்ந்து கூறுகின்ற 'கண்ட சித்தி' என்ற ஆற்றலைப் பெற்றவர். ஈழநாட்டு மன்னன் பரராசசேகரன் மனதில் இருந்த இரு கேள்விகளுக்குப் பாடல் பாடி விடை கூறினார். இவர் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மனதில் ஆழமாகப் பதியக் கூடிய சொற்றொடர்களைக் கொண்டு சுதந்திரமாகப் பாடிய தனிப்பாடல்கள் இன்றும் அனைவரது மனதிலும் எழுச்சியினை ஏற்படுத்தும். இவர் பாடிய முதல் நூல், திருக்கழுக்குன்ற புராணம் ஆகும். 'ஏட்டில் எழுதாமல் தன் மனதில் படித்த விரகன்' என வீரராகவரைப் புகழ்வர். இவர் இயற்றிய நூல்கள், திருக்கழுக்குன்ற புராணம், கழுக்குன்ற மாலை, சந்திரவாணன் கோவை, திருவாரூர் உலா, சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், கயத்தாற்றரசனுலா போன்ற பிரபந்தங்கள் ஆகும். கம்பராமாயணத்தைத் தெளிவாகக் கற்றவர். சீட்டுக்கவி பாடுவதில் திறம் பெற்றவராகத் திகழ்ந்தார். கச்சியப்ப சிவாச்சாரியார், "பலகலை மானெய்திடப் போய் கவியினால் இசை பெற்றானே" என வீரராகவரைப் புகழ்கிறார். கடல்கடந்து சென்று கவிமணம் பரப்பிய கவிஞராக அடையாளப்படுத்தப்படுகிறார். வீரராகவர் இறந்தபோது கயத்தாற்றரசர் போன்ற பலர் இரங்கற்பா எழுதியதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது.

பிரபல கட்டுரைகள்

நூல் அறிமுகம்

பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு 'தனிப்பாடல் திரட்டு ' என்ற நூலாக 1862 ஆவது ஆண்டு வெளிவந்தது. ஒவ்வாரு பாடலுக்குப் பின்னால் ஒரு நிகழ்வுக் கதை இருப்பதைக் காணலாம். கட்டுப்பாடின்றி புலவர்களால் சுதந்திரமாகப் பாடப்பட்ட பாடல்களாகத் தனிப்பாடல்கள் திகழ்கின்றன. தமிழ்மொழியை விரும்புபவர்கள் சுயமாக வாசிக்கக்கூடிய சிறந்த பாடல்கள் அடங்கிய நூல் தனிப்பாடல் திரட்டு எனலாம். அந்நூலில் வீரராகவ முதலியாரால் எழுதப்பட்ட பாடல்களும் அடங்கியுள்ளன. இவரது 37 பாடல்கள், தனிப்பாடல் திரட்டு நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக அமைந்த பாடல் 'இம்பர்வான் எல்லை இராமனையே பாடி..."என்பதாகும்.

சிறந்த பொருள் நயமிக்க பாடலாக இது திகழ்கிறது. தமிழில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் உள்ளதை உணர்த்தும் பாடலாக இது விளங்குகிறது. வீரராகவ முதலியார். ராமன் என்ற செல்வந்தரைச் சந்தித்துப் பாடல் பாடினார். ராமன் மகிழ்ச்சியோடு பாடலை ரசித்துவிட்டுப் பரிசாக யானை ஒன்றினை வழங்குகிறான். கவிஞரோ ஏழ்மையில் வாடுகிறார். அவருக்கான உணவிற்கே போராட வேண்டிய சூழலில் யானையை வீட்டிற்கு அழைத்துச் சென்று என்ன செய்வது என சிந்தித்தார். வேறுவழியின்றி யானையை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மனைவியோ, கவிஞர் கொண்டு வரும் பரிசுப் பொருளுக்காகக் காத்திருக்கிறாள். கவிஞர் வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி 'என்ன பரிசு கொண்டு வந்தீர்கள்' என்பதாகும். கவிஞருக்கோ யானை மட்டுமே பரிசாகக் கிடைத்தது எனக் கூறுவதற்கு மனதில்லை. மனைவியின் மனம் நோகாமல், வீட்டின் வெளியில் இருந்தபடியே பதில் கூறுகிறாள். யானை என்ற சொல்லிற்குரிய வேறு சொற்களைக் கூறிப் பாடுகிறார். அறிவாற்றல் மிகுந்த மனைவியும் வேறு பொருள் புரிந்து கொண்டு பதில் மொழி பேசுகிறார். இந்நிகழ்வின்போது வீரராகவரால் பாடப்பட்ட பாடலே இப்பாடலாகும். இப்பாடலின் விளக்கத்தையும் சிறப்பையும் 'என்ன கொணர்ந்தாய் பாணா நீ' என்ற தலைப்பில் காணலாம்.

பாடல்

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாங் களபமென்றேன் பூசுமென்றாள்.
மாதங்கமென்றேன் யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னுமென்றாள்
கம்பமா என்றேன் நற்களியா மென்றாள்
கைமா என்றேன் சும்மா கலங்கினாளே.

பாடல் பொருள் விளக்கம்

பண் இசைத்துப் பாடுகின்ற பாணன் ஒருவன். ராமன் என்ற வள்ளலைச் சந்தித்துப் பாடல் பாடி பரிசு பெறுகிறான். அவனுடைய மனைவி பாணினி, வீட்டின் வறுமையைப் போக்கக் கணவன் கொண்டு வருகிற பொருளைப் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறாள். பாணனும் வீடு வந்தும் பதில் ஏதும் பேசவில்லை. உடனே தலைவி பேசத் தொடங்குகிறாள்.

வானளவு புகழ்கொண்ட, இம்மண்ணில் வாழும் வள்ளலிடம் உனது திறமைகளைக் காட்டி என்ன பரிசு வாங்கி வந்தாய்?

"களபம் வழங்கினார்' என்கிறான் பாணன். 'சந்தனமா? நாம் சந்தனம் பூசிக்கொள்ளும் நிலைமையிலா இருக்கிறோம். அதை நீயே பூசிக்கொள்' என்கிறாள் பாணி. களபம் என்ற சொல்லிற்குச் சந்தனம் என்ற பொருளும் உண்டு. உடனே பாணன், "ஐயோ இல்லை, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அவர் தந்தது மாதங்கம்" என்றான்.

"ஓகோ, நமது நிலையைப் புரிந்து கொண்டு நிறைய தங்கம் வழங்கினாரா வள்ளல்? இனி கவலை இல்லை. நன்றாக வாழலாம்" என்றாள் பாணி.

"மாதங்கம் என்றதும் நீ தங்கம் என நினைத்தாயோ! இல்லையில்லை. அவர் தங்கம் தரவில்லை. வேழம் தந்தார்" என்றான் பாணன்.

"ஐயோ கரும்புதான் தந்தாரோ! நீ பாடிய பாடல் திறமைக்குத் தகுதியானது கரும்பு தானோ! அதை நீயே தின்று கொள்" என்றாள் பாணி.

'வேழம் என்றதும் கரும்பு எனத் தவறாகப் புரிந்து கொண்டாய். அவர் கரும்பு தரவில்லை. வள்ளல் தந்தது கம்பமா" என்று பாணன் கூறினான்.

"உன் கவித்திறனுக்குக் கம்பின் மாவுதான் கிடைத்ததோ! என்ன செய்ய? அதனைக் கொண்டு களி செய்து சாப்பிடலாம்" என ஆறுதலடைகிறாள் பாணி.

உடனே பாணன், 'தவறாகவே புரிந்து கொள்கிறாய். அவர் கம்பினுடைய மாவினைத் தரவில்லை. வள்ளல் அளித்த பொருள் கைம்மா' என்றான்.

அதனை உணர்ந்து கொண்ட பாணி, "ஐயோ,யானையா தந்தார். நமக்கே உணவில்லை. யானைக்கும் சேர்த்து உணவு கொடுக்க என்ன செய்வது?" எனக் கலங்கி நின்றாள்.

எள்ளல் சுவையான பாடலாக அமைந்து உரையாடல் அமைப்பில் பாடப்பட்ட இப்பாடலானது அழகோவியமாகத் திகழ்கிறது.

பாடலின் சிறப்பு

யானையைக் குறிக்கின்ற வேறு சொற்களான களபம், மாதங்கம், வேழம், கம்பமா, கைம்மா போன்றவை முறையே சந்தனம், பெரிய தங்கம், கரும்பு. கம்பின் மாவு, யானை ஆகிய பொருள்களையும் குறிக்கும் என்பதை இப்பாடல் கூறுகிறது.

பாணன் யானையைக் குறிக்கின்ற பிற சொற்களைக் கூறிக்கொண்டே வர, பாணி அச்சொற்களுக்கான வேறு பொருளைக் கூறிக்கொண்டே வருகிறாள்.

அந்தகக் கவியான வீரராகவ முதலியார், யானையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு பொருள் பல சொல் என்று இலக்கணம் கூறுவதற்குச் சான்றாக இப்பாடல் திகழ்கிறது.

யானை என்ற பொருளைக் குறிக்கக் களபம், மாதங்கம், வேழம், கம்பமா. கைம்மா போன்ற பல சொற்கள் தமிழில் இருப்பதை இப்பாடல் நினைவுறுத்துகிறது.

வள்ளல் கொடுத்த அன்புப் பரிசானது. தனக்குத் தேவைப்படாத பொருளாயினும், மறுக்காமல் ஏற்றுக் கொண்ட பாணனின் நற்பண்பு இங்குத் தெரிகிறது. மேலும், வறுமையென்றாலும் உதவி செய்பவர்களிடம் மீண்டும் உதவி கேட்காமல் வழங்கியதை ஏற்றுக்கொண்ட மனப்பக்குவத்தையும் இப்பாடல் வழியாக உணர முடிகிறது.

ஏற்கனவே, பல வள்ளல்களைச் சந்தித்து விலைமதிப்பு மிக்கப் பரிசுகளைப் பெற்று வந்தாலும் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வழக்கம் பாணர்களிடம் இருந்தது. எனவே அவர்கள் வறுமையிலேயே வாழ்க்கை முழுவதும் வருந்தி வாழ்கின்றனர் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாக அமைகிறது.

யானையாகிய விலங்கினைக் குறிக்க ஐம்பதிற்கும் மேற்பட்ட சொற்கள் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு பெயர்களுக்கு இடம்கொடுக்கும் செம்மையான மொழி தமிழ்மொழி என்பதும் தமிழர்களின் அறிவுத்திறன் வியப்பிற்குரியது என்பதும் வீரராகவ முதலியார் பாடலில் உறுதியாகிறது.


SEO Keywords:

Veeraraghava Mudaliar poem summary, Tamil devotional poem, Rama devotional song in Tamil, Imbar Vaan Ellai Raamanaiye Paadi meaning, classical Tamil poetry, Tamil religious poems, bhakti poems in Tamil, spiritual Tamil literature, Tamil poem on Lord Rama, Veeraraghava Mudaliar works, Tamil devotional lyrics.

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...