முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TNUSRB PC 2022 Question Paper | இலவச ஆன்லைன் தேர்வு (Free Quiz)

TNUSRB PC (இரண்டாம் நிலை காவலர்) 2022 Official Question Paper | இலவச ஆன்லைன் தேர்வு (Quiz)

TNUSRB PC தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களே! 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் பொதுத் தேர்வு (இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்) வினாத்தாளை அப்படியே ஒரு ஆன்லைன் வினாடி-வினா (Free Online Quiz) வடிவில் இங்கே பதிவேற்றம் செய்துள்ளோம்.

அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (Previous Year Question Papers) பயிற்சி செய்வது மிக முக்கியமான உத்தியாகும். இந்த 2022 TNUSRB PC Official Question Paper Quiz மூலம் உங்கள் தயாரிப்பு நிலையை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.


Indian police aspirant taking online quiz on laptop with police cap, timer, checkmarks and study icons – competitive exam preparation illustration

இந்த Free Online Test-ன் சிறப்பம்சங்கள்:

  • அதிகாரப்பூர்வ வினாக்கள்: 2022 தேர்வில் கேட்கப்பட்ட பகுதி - I முதன்மை எழுத்துத்தேர்வு (பொது அறிவு மற்றும் உளவியல்) மற்றும் பகுதி - II தமிழ் மொழி தகுதித் தேர்வு வினாக்கள்.
  • Real-Time Results: தேர்வு முடிந்தவுடன் உங்களின் மதிப்பெண் மற்றும் சரியான விடைகளை உடனே தெரிந்து கொள்ளலாம்.
  • Time Management: 2 மணி 40 நிமிடங்கள் கால அளவைக் கொண்டு நேர மேலாண்மையை வளர்த்துக் கொள்ள இது ஒரு சிறந்த பயிற்சி.
  • Mobile Friendly: உங்கள் மொபைல் அல்லது கணினியில் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தேர்வை இலவசமாக எழுதலாம்.

கீழே உள்ள வினாக்களுக்கு விடையளித்து உங்களின் தகுதியைச் சோதித்துப் பாருங்கள்!

1. இந்தியாவின் குறுக்கே செல்லும் சிறப்பு அட்சம் எது ?
(A) கடகரேகை
(B) மகரரேகை
(C) புவிநடுக்கோடு
(D) துருவ வட்டம்
(E) விடை தெரியவில்லை
2. விஜய நகர பேரரசிற்கு வந்த இத்தாலியப் பயணி
(A) மார்கோபோலோ
(B) நிக்கோலோ கோண்டி
(C) டோமிங்கோ
(D) பாகியான்
(E) விடை தெரியவில்லை
3. பொருத்துக.
I. காற்றழுத்தமானிa. பாலின் தூய்மை
II. நீரியல் அழுத்திb. சர்க்கரையின் அடர்த்தி
III. பால்மானிc. வளிமண்டல அழுத்தம்
IV. சர்க்கரைமானிd. பாஸ்கல் விதி
(A) c a d b
(B) c d a b
(C) d c b a
(D) b c d a
(E) விடை தெரியவில்லை
4. பொருத்துக.
I. மொகஞ்ச-தாரோa. கல்வி நகரம்
II. லோத்தல்b. வணிக நகரம்
III. மதுரைc. பெருங்குளம்
IV. காஞ்சிd. கப்பல் கட்டும் தளம்
(A) d c b a
(B) c d a b
(C) b a c d
(D) c d b a
(E) விடை தெரியவில்லை
5. வாக்கியம் I : வெவ்வேறு அளவுள்ள திடப்பொருளை பிரிப்பது சலித்தல் எனப்படும்.
வாக்கியம் II : வெவ்வேறு எடையுள்ள திடப்பொருளை பிரிப்பது தூற்றுதல் எனப்படும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
6. புவியில் காணப்படும் நீரில், ______ நீரானது கடல்களிலும், பெருங்கடல்களிலும் காணப்படுகிறது.
(A) 50%
(B) 75%
(C) 97%
(D) 60%
(E) விடை தெரியவில்லை
7. மஞ்சள் காமாலையால் (ஹெப்படைடிஸ் பி வைரஸ்) பாதிக்கப்படும் உறுப்பு எது ?
(A) கல்லீரல்
(B) நுரையீரல்
(C) சிறுநீரகம்
(D) மூளை
(E) விடை தெரியவில்லை
8. வாக்கியம் I : நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் என்பவை பிரபலமான OTT தளங்கள்.
வாக்கியம் II : OTT என்பதன் விரிவாக்கம் "Over The Top"
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
9. தவறான இணையை கண்டறிக.
பதவிகுறைந்த பட்ச வயது
I. குடியரசுத் தலைவர்a. 35 வயது
II. ராஜ்யசபா உறுப்பினர்b. 30 வயது
III. லோக்சபா உறுப்பினர்c. 21 வயது
IV. சட்ட மேலவை உறுப்பினர்d. 30 வயது
(A) குடியரசுத் தலைவர் வயது -35 வயது
(B) ராஜ்ய சபா உறுப்பினர் - 30 வயது
(C) லோக்சபா உறுப்பினர் -21 வயது
(D) சட்ட மேலவை உறுப்பினர் -30 வயது
(E) விடை தெரியவில்லை
10. பொருத்துக.
I. பண்டையக் கால கல்விமுறைa. RTE-2009
II. வார்தா கல்வித் திட்டம்b. 1992
III. கட்டாயக் கல்வி சட்ட விதிc. குருகுலக் கல்வி முறை
IV. புதிய கல்விக் கொள்கை திருத்தம்d காந்தியடிகள்
(A) c b d a
(B) a d c b
(C) c d a b
(D) c d b a
(E) விடை தெரியவில்லை
11. இந்திய அரசமைப்பின் எந்த சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா' என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்?
(A) சட்டப்பிரிவு 21
(B) சட்டப்பிரிவு 45
(C) சட்டப்பிரிவு 32
(D) சட்டப்பிரிவு 35
(E) விடை தெரியவில்லை
12. முட்டைகள் அழுகும் போது ______ வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகின்றது.
(A) ஆக்ஸிஜன்
(B) ஹைட்ரஜன் சல்பைடு
(C) கார்பன்-டை- ஆக்சைடு
(D) சல்பர்-டை-ஆக்சைடு
(E) விடை தெரியவில்லை
13. வடுவூர் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம் எது ?
(A) திருவாரூர்
(B) திருநெல்வேலி
(C) காஞ்சிபுரம்
(D) அரியலூர்
(E) விடை தெரியவில்லை
14. "AN UNCERTAIN GLORY" என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
(A) ஜவஹர்லால் நேரு
(B) அமர்த்தியா சென்
(C) சுவாமி விவேகானந்தா
(D) Dr. A. P. J. அப்துல் கலாம்
(E) விடை தெரியவில்லை
15. இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து இந்திய செல்வங்களை சூறையாடியவர் யார் ?
(A) கஜினி மாமூது
(B) முகமது கோரி
(C) செங்கிஸ்கான்
(D) தைமூர்
(E) விடை தெரியவில்லை
16. வாக்கியம் I : நமது இந்திய தேசிய கொடியில் உள்ள சக்கரத்தில் 40 ஆரங்கள் உள்ளது.
வாக்கியம் II : தேசிய கீதமானது 52 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
17. தவறான இணையை கண்டறிக.
இரத்த வகையாரிடமிருந்து இரத்தம் பெற முடியும்
I. Aa. A, O
II. Bb. B, O
III. ABс. АВ, О
IV. Od. O மட்டும்
(A) A-A, O
(B) B-B, O
(C) AB-AB, O
(D) O-O மட்டும்
(E) விடை தெரியவில்லை
18. வாக்கியம் I : கௌதம புத்தரால் பௌத்த மதம் தோற்றுவிக்கப்பட்டது.
வாக்கியம் II : பௌத்த மதம் திகம்பரம் சுவேதம்பரம் என பிரிவுகளாக பிரிந்தது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
19. எவ்வகை தாது தசைகளின் செயல்திறனை ஒழுங்குபடுத்துகின்றது?
(A) கால்சியம்
(B) பொட்டாசியம்
(C) சோடியம்
(D) அயோடின்
(E) விடை தெரியவில்லை
20. அதிக எண்ணிக்கையிலான ______ இருப்பதால் சென்னை “ஆசியாவின் டெட்ராய்டு” என்று அழைக்கப்படுகிறது.
(A) வாகன தொழிற்சாலைகள்
(B) மென்பொருள் நிறுவனங்கள்
(C) கணினி வன்பொருள் நிறுவனங்கள்
(D) ஆயத்த ஆடை நிறுவனங்கள்
(E) விடை தெரியவில்லை
பிரபல கட்டுரைகள்
21. வாக்கியம் I : பணவீக்கம் என்பது விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதையும் குறிக்கும்.
வாக்கியம் II : பணவாட்டம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
22. பொருத்துக.
I. பாஸ்பரஸ்a. மின்விளக்கிற்கான இழைகள்
II. டங்ஸ்டன்b. தீப்பெட்டிகள் தயாரித்தல்
III. கிராஃபைட்c. இராக்கெட் எரிபொருள் பற்ற வைப்பான்
IV. போரான்d. பென்சில்கள் தயாரித்தல்
(A) c b d a
(B) b a c d
(C) b a d c
(D) d c b a
(E) விடை தெரியவில்லை
23. பொருத்துக.
I. பாலாறுa. பச்சையாறு
II. காவிரிb. சின்னாறு
III. தாமிரபரணிc. பவானி
IV. தென் பெண்ணையாறுd. கிளியாறு
(A) c b a d
(B) d c a b
(C) b a d c
(D) d c b a
(E) விடை தெரியவில்லை
24. பொருத்துக.
I. INS விக்ராந்த்a. போர் விமானம்
II. தேஜஸ்b. விமானம் தாங்கி
III. GSLVc. ராக்கெட் ஏவுதல் வாகனம்
IV. வந்தே பாரத்d. அரை அதிவேக ரயில்
(A) b a c d
(B) b a c d
(C) c a b d
(D) a c d b
(E) விடை தெரியவில்லை
25. கீழ் உள்ளவற்றுள் எது/எவை புதை வடிவ பொருட்கள் ?
(A) தார்
(B) தார் மற்றும் நிலக்கரி
(C) நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
(D) பெட்ரோலியம் மற்றும் அணுக்கரு கனிமங்கள்
(E) விடை தெரியவில்லை
26. வாக்கியம் I நமது சூரியக்குடும்பமானது, பால்வெளி வீண்மீன் திரள் மண்டலத்தின் ஒரு பகுதி ஆகும்.
வாக்கியம் II : நமது சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
27. வாக்கியம் I : புவி தன் அச்சில் தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வருவதற்கு 24 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது. இதன் காரணமாக பகல், இரவு ஏற்படுகிறது.
வாக்கியம் II : "லீப் வருடம்” இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
28. தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு மாற்றியவர் யார்?
(A) முகமது பின் துக்ளக்
(B) அலாவுதீன் கில்ஜி
(C) பால்பன்
(D) இல்துத்மிஷ்
(E) விடை தெரியவில்லை
29. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல ?
(A) உருளைக்கிழக்கு
(B) கேரட்
(C) பீட்ரூட்
(D) முள்ளங்கி
(E) விடை தெரியவில்லை
30. இந்தியாவில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட அலைக்கற்றை ______
(A) 2-G
(B) 3-G
(C) 4-G
(D) 5-G
(E) விடை தெரியவில்லை
31. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க "வேலைவாய்ப்பு அலுவலகத்தை" அமைத்தார்?
(A) முகம்மது பின் துக்ளக்
(B) அலாவுதீன் கில்ஜி
(C) ஃபெரோஷ் ஷா துக்ளக்
(D) பால்பன்
(E) விடை தெரியவில்லை
32. வாக்கியம் I : யானை தமிழ்நாட்டின் மாநில விலங்கு.
வாக்கியம் II : பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
33. வாக்கியம் I : ஒளியின் திசைவேகம் ஒலியின் திசைவேகத்தை விட குறைவு என்பதால் இடிச் சத்தம் கேட்பதற்கு முன்னரே மின்னல் நம் கண்களுக்கு தெரிகிறது.
வாக்கியம் II : உயரமான கட்டடங்களை மின்னல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் கருவி மின்னல் கடத்தி ஆகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
34. 1857 ஆம் ஆண்டு புரட்சி நடைபெற்றபோது முகலாய மன்னராக பதவி வகித்தவர்
(A) அக்பர்
(B) ஒளரங்கசீப்
(C) இரண்டாம் பகதூர்ஷா
(D) நானா சாகிப்
(E) விடை தெரியவில்லை
35. தவறான இணையை கண்டறிக.
I. பொதுத்துறைa. சேவை நோக்கம்
II. தனியார் துறைb. இலாப நோக்கம்
III. முதன்மைத்துறைc. கோழி வளர்ப்பு
IV. மூன்றாம் துறைd. தொழிற்சாலைகள்
(A) பொதுத்துறை - சேவை நோக்கம்
(B) மூன்றாம் துறை - தொழிற்சாலைகள்
(C) முதன்மைத்துறை - கோழி வளர்ப்பு
(D) தனியார் துறை - இலாப நோக்கம்
(E) விடை தெரியவில்லை
36. தாஜ்மஹால் ______ நதிக்கரையில் அமைந்துள்ளது.
(A) காவிரி
(B) யமுனா
(C) கோதாவரி
(D) கங்கை
(E) விடை தெரியவில்லை
37. எந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 'NOTA' அறிமுகப்படுத்தப்பட்டது ?
(A) 2002
(B) 2005
(C) 2014
(D) 2017
(E) விடை தெரியவில்லை
38. கோடைப் பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் தலக்காற்றின் பெயர் ______
(A) நார்வெஸ்டர்ஸ்
(B) பருவக்காற்று
(C) மாஞ்சாரல்
(D) [விருப்பம் இல்லை]
(E) விடை தெரியவில்லை
39. சிம்கார்டு, ஏ.டி.எம். கார்டுகள் ______ என்ற குறைகடத்தியால் ஆக்கப்பட்டிருக்கும்.
(A) சிலிகான்
(B) இரும்பு
(C) அலுமினியம்
(D) காப்பர்
(E) விடை தெரியவில்லை
40. இங்கிலாந்து நாட்டின் தற்போதைய மன்னர் யார் ?
(A) இளவரசி எலிசபெத் II
(B) ஜார்ஜ் மன்னர்
(C) மன்னர் மூன்றாம் சார்லஸ்
(D) இராணி விக்டோரியா
(E) விடை தெரியவில்லை
41. 'பிரிதிவிராஜ் ராசோ' எனும் காவியத்தை இயற்றியவர்?
(A) சந்த் பார்தை
(B) பிரிதிவிராஜ் சௌகான்
(C) காளிதாஸ்
(D) அமீர் குஸ்ரூ
(E) விடை தெரியவில்லை
42. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது
(A) தொண்டைக்குழி
(B) தைராய்டு
(C) குரல்வளை
(D) பாராதைராய்டு
(E) விடை தெரியவில்லை
43. பொருத்துக.
I. இமயமலைத் தொடர்a. வட அமெரிக்கா
II. ராக்கி மலைத் தொடர்b. தென் அமெரிக்கா
III. ஆல்ப்ஸ் மலைத் தொடர்c. ஐரோப்பா
IV. ஆண்டிஸ் மலைத் தொடர்d. ஆசியா
(A) b c d a
(B) c d a b
(C) d b a c
(D) d a c b
(E) விடை தெரியவில்லை
44. வாக்கியம் I : குதுப்மினார் குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டு இல்துமிஷால் கட்டி முடிக்கப்பட்டது.
வாக்கியம் II : குதுப்மினார் ஹைதராபாத்தில் உள்ளது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
45. இந்தியாவின் தேசிய மரம்
(A) ஆலமரம்
(B) அரச மரம்
(C) வேப்ப மரம்
(D) மாமரம்
(E) விடை தெரியவில்லை
46. கீழ்க்கண்ட தொடர்களில் சரியான தொடரைக் தேர்ந்தெடுக்க
(A) வாலைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
(B) வாழைப்பலம் உடளுக்கு மிகவும் நல்லது
(C) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
(D) வாளைப்பழம் உடலுக்கு மிகவும் நள்ளது
(E) விடை தெரியவில்லை
47. வேறுபட்டு இருப்பதை தேர்ந்தெடுத்து எழுதுக
(A) நாற்காலி
(B) மேசை
(C) ரேடியோ
(D) அல்மிரா
(E) விடை தெரியவில்லை
48. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் விடுபட்ட எண்ணை தேர்வு செய்யவும்
Indian Police aspirant online quiz preparation
(A) 27
(B) 35
(C) 54
(D) 64
(E) விடை தெரியவில்லை
49. இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு
(A) 1/2
(B) 3/2
(C) 2
(D) 1
(E) விடை தெரியவில்லை
50. பொருத்துக.
I. விற்பனை விலைa. அடக்கவிலை -விற்பனை விலை
II. நட்டம்b. விற்பனை விலை -அடக்க விலை
III. இலாபம்c. வாங்கிய விலை + கூடுதல் செலவுகள்
IV. அடக்க விலைd. குறித்த விலை -தள்ளுபடி
(A) d a b c
(B) a b c d
(C) d b a c
(D) b a c d
(E) விடை தெரியவில்லை
51. எந்த வெண்வரைபடம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களுக்குள் இருக்கும் தொடர்பை சரியாக குறிக்கிறது ? வினாடி, நிமிடம், மணிநேரம்
Indian Police aspirant online quiz preparation
(A) விருப்பம் A
(B) விருப்பம் B
(C) விருப்பம் C
(D) விருப்பம் D
(E) விடை தெரியவில்லை
52. பின்வரும் சொற்தொடர்களில் தகுந்த இணையான சொல்லைக் கண்டுப்பிடித்து விடையளிக்கவும்
மனிதன்: நடப்பது :: மீன்: ?
(A) நீந்துதல்
(B) சாப்பிடுதல்
(C) ஓடுதல்
(D) பறப்பது
(E) விடை தெரியவில்லை
53. 'புயல்' - என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது ?
(A) TEMPEST
(B) LAND BREEZE
(C) TORNADO
(D) STORM
(E) விடை தெரியவில்லை
54. வாக்கியம் I : 2018 ஆம் ஆண்டு லீப் ஆண்டு.
வாக்கியம் II : 400 ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் ஆண்டுகள் ஆகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
55. 'DARK' என்பதன் குறியீடு EBSL எனில் 'BACK' என்பதன் குறியீடு எது?
(A) DBEM
(B) CBDL
(C) CBEL
(D) CBDM
(E) விடை தெரியவில்லை
56. ஒரு வாத்து இரு வாத்துகளுக்கு முன்னால் உள்ளது. ஒரு வாத்து இரு வாத்துகளுக்கு பின்னால் உள்ளது. ஒரு வாத்து மத்தியில் உள்ளது. அங்கு எத்தனை வாத்துகள் உள்ளன ?
(A) 5
(B) 3
(C) 7
(D) 4
(E) விடை தெரியவில்லை
57. 'அம்மா பசிக்குது, எனக்குச் சோறு வேணும்' -இத்தொடரில் உள்ள பேச்சு வழக்குச் சொற்களுக்குச் சரியான எழுத்து வழக்குச் சொற்களைத் தேர்வு செய்க.
(A) அம்மா பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும்
(B) அம்மா பசிக்குது. எனக்குச் சோறு வேண்டும்
(C) அம்மா பசிக்கிறது. எனக்குச் சோறு வேணும்
(D) அம்மா பசிக்கிறது. என்கு சோறு வேணும்
(E) விடை தெரியவில்லை
58. 40 மாணவர்கள் உள்ள ஒரு வரிசையில், மணி என்பவர் வலமிருந்து 14 வது நிலையில் இருக்கிறார். இடமிருந்து அவரது நிலை என்ன?
(A) 24th
(B) 25th
(C) 26th
(D) 27th
(E) விடை தெரியவில்லை
59. ராமின் வீடு கிருஷ்ணனின் வீட்டிலிருந்து தெற்கு நோக்கி உள்ளது. கோவிந்தாவின் வீடு கிருஷ்ணனின் வீட்டிலிருந்து கிழக்கு நோக்கி அமைந்திருந்தால். ராமின் வீடு கோவிந்தாவின் வீட்டிலிருந்து எந்த திசையில் அமைந்துள்ளது?
(A) வட கிழக்கு
(B) வட மேற்கு
(C) தென் கிழக்கு
(D) தென் மேற்கு
(E) விடை தெரியவில்லை
60. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது அதனுடைய பரப்பளவு ______ மடங்காகும்.
(A) 2
(B) 3
(C) 4
(D) 6
(E) விடை தெரியவில்லை
61. கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது ?
(A) கரகாட்டம் என்றால் என்ன ?
(B) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
(C) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?
(D) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?
(E) விடை தெரியவில்லை
62. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்களுக்கு இடையே உள்ள கோணம்
(A) 120°
(B) 180°
(C) 90°
(D) 100°
(E) விடை தெரியவில்லை
63. i) ரமா என்பவர் ராணியை விட அதிக மதிப்பெண்கள் எழுத்துள்ளார்.
ii) ராணி என்பவர், ரத்னாவை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
iii) ரத்னா, ரமாவை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
iv) பத்மா என்பவர் ரமாவை விட அதிக மதிப்பெண்களும், ரத்னாவை விட குறைவான மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
இதில் யார் மிக அதிக மதிப்பெண் பெற்றுள்ளார் ?
(A) ரமா
(B) பத்மா
(C) ராணி
(D) ரத்னா
(E) விடை தெரியவில்லை
64. "இரவியின் அம்மா என்னுடைய அம்மாவுக்கு ஒரே மகள்" என்று கமல் சொன்னால், கமல் இரவிக்கு என்ன உறவு ?
(A) தாத்தா
(B) அப்பா
(C) சகோதரர்
(D) தாய்மாமன்
(E) விடை தெரியவில்லை

கீழே கொடுக்கப்பட்டுள்ள பை விளக்கப்படத்தை படித்து, பின்வரும் 65-67 கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.

Indian Police aspirant online quiz preparation
65. எந்த சங்கத்திலும் உறுப்பினர் இல்லாதவரின் சதவீதம் என்ன ?
(A) 5%
(B) 8%
(C) 10%
(D) 6%
(E) விடை தெரியவில்லை
66. கிரிக்கெட் விளையாட்டு சங்கத்தினர் மட்டுமே, மற்றும் கால்பந்து சங்கத்தினர் மட்டுமே ஆகியோரின் பங்கீடு என்ன ?
(A) 1:3
(B) 2:1
(C) 1:2
(D) 3:1
(E) விடை தெரியவில்லை
67. கிரிக்கெட் மற்றும் கால்பந்து சங்கங்களின் உறுப்பினர்களான மாணாக்கர்கள் எத்தனை ?
(A) 500
(B) 650
(C) 550
(D) 600
(E) விடை தெரியவில்லை

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டை விளக்கப்படம், 2021 இல் பல மாநிலத்தின் அரிசி மற்றும் கோதுமையின் உற்பத்தி அளவை குறிக்கிறது. விளக்கப்படத்தை படித்து, பின்வரும் 68-69 கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.

Indian Police aspirant online quiz preparation
68. அரிசி மற்றும் கோதுமை மொத்த உற்பத்தி அளவு எந்த மாநிலத்தில் குறைவாக உள்ளது ?
(A) B
(B) C
(C) D
(D) E
(E) விடை தெரியவில்லை
69. எந்த மாநிலத்தில் அரிசி உற்பத்தி அதிகமாக உள்ளது ?
(A) A
(B) B
(C) C
(D) D
(E) விடை தெரியவில்லை
70. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
(A) இரட்டைக் காப்பியங்கள் யாவை ?
(B) இரட்டைக் காப்பியங்கள் என்றால் என்ன ?
(C) சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர் யாது ?
(D) சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இலக்கண நூல்களா ?
(E) விடை தெரியவில்லை
71. தவறான இணையை கண்டறிக.
I. பறந்தa. பறவை
II. படித்தb. பையன்
III. வந்தc. நின்றான்
IV. சென்றுd. பார்த்தான்
(A) பறந்த -பறவை
(B) படித்த - பையன்
(C) வந்த - நின்றான்
(D) சென்று - பார்த்தான்
(E) விடை தெரியவில்லை
72. கனவினும் இன்னாதது எது ?
(A) கயவர் நட்பு
(B) பேதையர் நட்பு
(C) சொல்வேறு செயல்வேறு உள்ளவர் நட்பு
(D) தீயவர் நட்பு
(E) விடை தெரியவில்லை
73. "மதுரை பதிற்றுப்பத்தந்தாதி” என்னும் நூலை இயற்றியவர் யார்?
(A) பாரதியார்
(B) குமரகுருபரர்
(C) பெருஞ்சித்தனார்
(D) பரஞ்சோதி முனிவர்
(E) விடை தெரியவில்லை
74. ஒரு பாடலின் அடி, சீர்களில் எவ்வெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடை ?
(A) முதல் எழுத்து
(B) இரண்டாம் எழுத்து
(C) இறுதி எழுத்து
(D) மைய எழுத்து
(E) விடை தெரியவில்லை
75. சா.கந்தசாமி எழுதிய எப்புதினத்திற்கு சாகித்திய அகாடெமி விருது கிடைத்துள்ளது?
(A) சாயாவனம்
(B) விசாரணைக் கமிஷன்
(C) சில நேரங்களில் சில மனிதர்கள்
(D) சுடுமண் சிலைகள்
(E) விடை தெரியவில்லை
76. மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் எதைப் போன்றது ?
(A) அகம்பாவம்
(B) மாணிக்கக் கோயில்
(C) அன்பு பாதை
(D) தடம் மறைந்துப் போதல்
(E) விடை தெரியவில்லை
77. 'நோன்றல்' என்ற சொல்லின் பொருள் யாது?
(A) மறவாமை
(B) உறவினர்
(C) வறியவர்
(D) பொறுத்தல்
(E) விடை தெரியவில்லை
78. வாக்கியம் I : இந்திர விழா நடைபெற்ற நாட்கள் இருபத்தாறு என மணிமேகலை கூறுகிறது.
வாக்கியம் II : பசியும் பிணியும் பகையும் பெருகவும் மழையும் வளமும் நிறையவும் என முரசறைவோன் வாழ்த்தினான்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
79. நிரை என்ற ஓரசைச்சீரின் வாய்பாடு தருக ?
(A) பிறப்பு
(B) மலர்
(C) காசு
(D) நாள்
(E) விடை தெரியவில்லை
80. வாக்கியம் I : மதுரைப்பக்கம் மாட்டுச் சந்தையை "மாட்டுத் தாவணி" என்று சொல்வார்கள்.
வாக்கியம் II : கிராமச் சந்தையில் ஆண்கள் மட்டுமே வந்து விற்பனை செய்வார்கள்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
81. குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்
(A) பக்தவச்சலம்
(B) எம்.ஜி.ராமச்சந்திரன்
(C) ஜெ. ஜெயலலிதா
(D) கு. காமராசர்
(E) விடை தெரியவில்லை
82. சாந்த குணம் உடையவர்கள் ______ முழுவதையும் பெறுவர்.
(A) புத்தகம்
(B) செல்வம்
(C) உலகம்
(D) துன்பம்
(E) விடை தெரியவில்லை
83. ஜெயகாந்தன் எழுதாத புதினம் எது ?
(A) சுந்தரகாண்டம்
(B) கங்கை எங்கே போகிறாள்
(C) இன்னும் ஒரு பெண்ணின் கதை
(D) சேற்றில் மனிதர்கள்
(E) விடை தெரியவில்லை
84. பொருத்துக.
I. அடிசில்a. மணம்
II. வெறிb. சோறு
III. மடிவுc. பலாப்பழம்
IV. வருக்கைd. சோம்பல்
(A) b a c d
(B) b a d c
(C) d a c b
(D) d c b a
(E) விடை தெரியவில்லை
85. பொருத்துக.
I. ஆசியாவின் மிகப் பழமையான நூலகம்a. கொல்கத்தா தேசிய நூலகம்
II. இந்தியாவின் முதல் பொது நூலகம்b. லைப்ரரி ஆப் காங்கிரஸ்
III. இந்தியாவின் மிகப் பெரிய நூலகம்c. சரஸ்வதி மகால்
IV. உலகின் மிகப்பெரிய நூலகம்d. திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
(A) c d a b
(B) b d c a
(C) c b d a
(D) d b a c
(E) விடை தெரியவில்லை
86. வாக்கியம் I : 'உம்' எனும் இனச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.
வாக்கியம் II : 'மட்டும்' எனும் இடைச்சொல் வரையறைப் பொருள் தருகிறது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
87. வாக்கியம் I : பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக புறநானூறு விளங்குகிறது.
வாக்கியம் II : "யாண்டு" என்பது 'எனது' என்னும் பொருளில் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
88. சீர்காழி இரா. அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாள் ______ நாளாகக் கொண்டாடப்படுகிறது.
(A) தேசிய கல்வி நாள்
(B) தேசிய உரிமை நாள்
(C) தேசிய மருத்துவர் நாள்
(D) தேசிய நூலக நாள்
(E) விடை தெரியவில்லை
89. உவமை,உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறும் அணி எது ?
(A) உவமை
(B) உருவகம்
(C) தீவகம்
(D) நிரல்நிறை
(E) விடை தெரியவில்லை
90. "சமயக் கணக்கர்" என்பவர் யார் ?
(A) சமயத்தத்துவ வாதிகள்
(B) நேரத்தைக் கணக்கிடுவோர்
(C) சமையல் செய்பவர்
(D) தூதர்
(E) விடை தெரியவில்லை
91. 'வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது ?
(A) வாய் + தீயின்
(B) வாய்த்து + ஈயின்
(C) வாய்த்து + தீயின்
(D) வாய் + ஈயின்
(E) விடை தெரியவில்லை
92. பொருத்துக.
I. சுருங்கிய பழம்a. ஒல்லிக்காய்
II. சூட்டினால் பழுத்த பிஞ்சுb. சிவியல்
III. குளுகுளுத்த பழம்c. வெம்பல்
IV. தென்னையில் கெட்ட காய்d. அளியல்
(A) b c d a
(B) b d a c
(C) b a c d
(D) b d c a
(E) விடை தெரியவில்லை
93. முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொல் எது ?
(A) மமீ
(B) குருவி
(C) கிளி
(D) ஆம்
(E) விடை தெரியவில்லை
94. பொருத்துக.
I. கோட்டிa. போர்
II. பொலம்b. மழை
III. வசிc. பொன்
IV. கலாம்d. மன்றம்
(A) d c b a
(B) b d c a
(C) a c b d
(D) c d a b
(E) விடை தெரியவில்லை
95. சாகித்திய அகாடெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார் ?
(A) ராஜம் கிருஷ்ணன்
(B) எம். எஸ். சுப்புலட்சுமி
(C) பால சரஸ்வதி
(D) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
(E) விடை தெரியவில்லை
96. கீழ்க்காண்பனவற்றுள் காதில் அணியும் அணிகலன் எது ?
(A) குழை
(B) சுட்டி
(C) சிலம்பு
(D) கிண்கிணி
(E) விடை தெரியவில்லை
97. வாக்கியம் I : தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
வாக்கியம் II : எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர் வீரமாமுனிவர்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
98. வாக்கியம் I : 'மதுரை செல்லும் வழி யாது ?' என்ற வினாவிற்கு இப்பக்கமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது 'சுட்டு விடை' ஆகும்.
வாக்கியம் II : 'கடைக்குப் போவாயா ?' என்ற வினாவிற்குப் போக மாட்டேன் என மறுத்துக் கூறுதல் 'மறைவிடை' ஆகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
99. தவறான இணையை கண்டறிக.
I. எஸ். இராமகிருஷ்ணன்a. கால் முளைத்த கதைகள்
II. தாராபாரதிb. இது எங்கள் கிழக்கு
III. கவிமணி தேசிய விநாயகனார்c. ஆசிய ஜோதி
IV. தாயுமானவர் பாடல்கள்d. புதிய விடியல்கள்
(A) தாராபாரதி - இது எங்கள் கிழக்கு
(B) எஸ். இராமகிருஷ்ணன் - கால் முளைத்த கதைகள்
(C) கவிமணி தேசிக விநாயகனார் - ஆசிய ஜோதி
(D) தாயுமானவர் பாடல்கள் - புதிய விடியல்கள்
(E) விடை தெரியவில்லை
100. வாக்கியம் I : தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது தமிழர் மரபு.
வாக்கியம் II : வாழை இலையில் மருத்துவப் பயன்கள் உள்ளன.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
101. "முதற்கருவி" என்ற பெயரில் அழைக்கப்படும் இசைக்கருவி எது ?
(A) மத்தளம்
(B) சங்கு
(C) கொம்பு
(D) பறை
(E) விடை தெரியவில்லை
102. கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை
(A) தௌலீஸ்வரம்
(B) கிருஷ்ணராஜசாகர்
(C) ஹீராகுட்
(D) பவானி சாகர்
(E) விடை தெரியவில்லை
103. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர்
(A) எழுது
(B) பாடு
(C) படித்தல்
(D) நடி
(E) விடை தெரியவில்லை
104. வாக்கியம் I : இத்தாலி நாட்டைச் சேர்ந்த கடற்பயணி மார்க்கோபோலோ ஆவார்.
வாக்கியம் II : முந்நீர் வழக்கம் என்று கடல் பயணத்தைக் குறிப்பிடும் நூல் அகநானூறு.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
105. புகழ் கொண்ட குறளொடு அகம்புறமும் - செம் பொருள் கண்ட தமிழ்ச்சங்கம் என்ற இப்பாடலின் ஆசிரியர் யார்?
(A) பாரதியார்
(B) உடுமலை நாராயணகவி
(C) பாரதிதாசன்
(D) செயங்கொண்டார்
(E) விடை தெரியவில்லை
106. பொருத்துக.
I. பண்புத் தொகைa. சிவப்பு சட்டை பேசினார்
II. உவமைத் தொகைb. செங்காந்தள்
III. உம்மைத் தொகைc. மலர்க்கை
IV. அன்மொழித் தொகைd. தாய் சேய்
(A) d a b c
(B) b d a c
(C) c b a d
(D) b c d a
(E) விடை தெரியவில்லை
107. தமிழ்நாட்டில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள இடம்?
(A) சிந்துசமவெளி
(B) உத்திர மேரூர்
(C) கீழடி
(D) ஆதிச்ச நல்லூர்
(E) விடை தெரியவில்லை
108. பின்வருவனவற்றுள் குமரகுருபரரால் எழுதப்படாத நூல் எது ?
(A) தந்தர் கலிவெண்பா
(B) தேம்பாவணி
(C) மதுரைக் கலம்பகம்
(D) நீதி நெறி விளக்கம்
(E) விடை தெரியவில்லை
109. காலம் கரந்த பெயரெச்சம் ______ ஆகும்.
(A) வேற்றுமைத் தொகை
(B) வினைத் தொகை
(C) பண்புத் தொகை
(D) உவமைத் தொகை
(E) விடை தெரியவில்லை
110. வாக்கியம் I : கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறியவர் - கம்பர்.
வாக்கியம் II : விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்சியை உவமையாக்கியவர் இளங்கோவடிகள்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
111. வாக்கியம் 1 : தமிழகம் வந்து மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்.
வாக்கியம் II: பெண்களின் உயர்வுக்கு துணை நின்றவர் பண்டித ரமாபாய்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
112. 'மல்லிகை மலர்ந்தது' - என்பது
(A) வேற்றுமைத்தொடர்
(B) வினைமுற்றுத்தொடர்
(C) எழுவாய்த்தொடர்
(D) விளித்தொடர்
(E) விடை தெரியவில்லை
113. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகப் பணிபுரிந்தவர்
(A) முத்துலெட்சுமி
(B) கமலா
(C) சத்தியவாணிமுத்து
(D) தமிழரசி
(E) விடை தெரியவில்லை
114. “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்" என கப்பலைப் பற்றிக் கூறும் நூல் எது ?
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) கலித்தொகை
(D) பதிற்றுப்பத்து
(E) விடை தெரியவில்லை
115. எதுகை இடம் பெறாத இணையை எடுத்து எழுதுக
(A) இரவு - இயற்கை
(B) வங்கம் - சங்கம்
(C) அசைவு - இசைவு
(D) உலகு - புலவு
(E) விடை தெரியவில்லை
116. திரைப்படப்பாடல் ஆசிரியராகப் புகழ் பெற்றவர்
(A) ஆலங்குடி சோமு
(B) தீபங்குடி ராமு
(C) விருதுப்பட்டி பாரி
(D) சின்னாளப்பட்டி மாரி
(E) விடை தெரியவில்லை
117. பின்வருவனவற்றுள் ஒருவர் “எண்பேராயம்” எனும் குழுவைச் சார்ந்தவர் அல்லர்
(A) சாரணர்
(B) கரும விதிகள்
(C) யானை வீரர்
(D) இவுளி மறவர்
(E) விடை தெரியவில்லை
118. 'திருவானைக்கா உலா' என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) ஒட்டக்கூத்தார்
(B) கம்பர்
(C) காளமேகப் புலவர்
(D) சேக்கிழார்
(E) விடை தெரியவில்லை
119. மழை சடசடவெனப் பெய்தது -இத்தொடரில் அமைந்துள்ளது
(A) அடுக்குத்தொடர்
(B) இரட்டைக்கிளவி
(C) தொழிலாகுபெயர்
(D) பண்பாகு பெயர்
(E) விடை தெரியவில்லை
120. 'இளிவரல்' என்பது ______ சுவையினைச் சுட்டுகிறது.
(A) நகை
(B) துன்பம்
(C) இன்பம்
(D) வெகுளி
(E) விடை தெரியவில்லை
121. பொருத்துக.
I. தோல் கருவிகள்a. யாழ், வீணை
II. கஞ்சக் கருவிகள்b. குழல், சங்கு
III. காற்றுக் கருவிகள்c. சாலரா, சேகண்டி
IV. நரம்புக் கருவிகள்d. முழவு, முரசு
(A) a b c d
(B) c b d a
(C) b c a d
(D) d c b a
(E) விடை தெரியவில்லை
122. பொருத்துக.
I. நேர் நிரைa. புளிமா
II. நிரை நேர்b. கூவிளம்
III. நேர் நேர்C. கருவிளம்
IV. நிரை நிரைd. தேமா
(A) b d C a
(B) a d C [No match]
(C) b a C d
(D) b d a C
(E) விடை தெரியவில்லை
123. "மல்லெடுத்த" என்பதின் பொருள்
(A) போர்
(B) தரும்
(C) வலிமைபெற்ற
(D) வயல்
(E) விடை தெரியவில்லை
124. பொருத்துக.
I. தனித்தமிழ் இயக்கம்a. நா. பார்த்த சாரதி
II. குறிஞ்சி மலர்b. வ. ராமசாமி
III. மழையும் புயலும்c. இரா. பி. சேதுபிள்ளை
IV. தமிழின்பம்d. இரா. இளங்குமரனார்
(A) d b a C
(B) d C a b
(C) d b C a
(D) d a b C
(E) விடை தெரியவில்லை
125. 'என்னுடன் ஊருக்கு வருவாயா ?' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா ?' என்று கூறுவது
(A) ஐய வினா
(B) வினா எதிர் வினாதல் விடை
(C) இனமொழி விடை
(D) ஏவல் விடை
(E) விடை தெரியவில்லை
126. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர்
(A) சாவித்திரிபாய் பூலே
(B) பண்டித ரமாபாய்
(C) முத்துலெட்சுமி
(D) மலாலா
(E) விடை தெரியவில்லை
127. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடிக்க. "தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்"
(A) மாற்றாரை மாற்றும் படை
(B) கண்டானாம் தான்கண்டவாறு
(C) ஆன்ற பெருமை தரும்
(D) கேளாது நட்டார் செயின்
(E) விடை தெரியவில்லை
128. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) காலை மாலை
(B) உள்ளும் புறமும்
(C) விருப்பு வெறுப்பு
(D) வாடி வதங்கி
(E) விடை தெரியவில்லை
129. "கொல்லிப்பாவை" என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
(A) சுரதா
(B) ஈரோடு தமிழன்பன்
(C) ராஜமார்த்தாண்டன்
(D) வைரமுத்து
(E) விடை தெரியவில்லை
130. ஓவியம் வரையப் பயன்படும் துணி
(A) படாம்
(B) சுவர்
(C) குகை
(D) செப்பேடு
(E) விடை தெரியவில்லை
131. பொருத்துக.
I. பாக்கு, பாட்டுa. உயிர்தொடர்க் குற்றியலுகரம்
II. பஞ்சு, பங்குb. வன்தொடர்க் குற்றியலுகரம்
III. வரகு, முதுகுc. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
IV. எஃகு, அஃதுd. மென்தொடர்க் குற்றியலுகரம்
(A) d a c b
(B) a d c b
(C) b d a c
(D) c d a b
(E) விடை தெரியவில்லை
132. தேவநேயம் என்ற நூலைத் தொகுத்தவர் யார் ?
(A) இரா. இளங்குமரனார்
(B) பெருஞ்சித்திரனார்
(C) தந்தை பெரியார்
(D) பாரதிதாசன்
(E) விடை தெரியவில்லை
133. "பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும்" அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
(A) பல்லக்கு தூக்குபவர்
(B) பல இன மக்கள்
(C) பல தொழில் செய்வோர்
(D) பலமொழி பேசும் மக்கள்
(E) விடை தெரியவில்லை
134. தவறான இணையை கண்டறிக.
I. ஆறுa. இரு கரைகளுக்கு இடையே ஓடும் நீர்ப்பரப்பு
II. கடல்b. அலைகளைக் கொண்ட உப்பு நீர்ப் பெரும்பரப்பு
III. ஊற்றுC. மலையில் இருந்து கீழ்நோக்கி விழும் நீர்நிலை
IV. ஏரிd. வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
(A) ஆறு இரு கரைகளுக்கு இடையே ஓடும் நீர்ப்பரப்பு
(B) கடல் - அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும் பரப்பு
(C) ஊற்று - மலையில் இருந்து கீழ்நோக்கி விழும் நீர்நிலை
(D) ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
(E) விடை தெரியவில்லை
135. வாக்கியம் I : ஆண்பாற் பிள்ளைத்தமிழ் - சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
வாக்கியம் II : பெண்பாற் பிள்ளைத்தமிழ் -கழங்கு, அம்மானை, ஊசல்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
136. வாக்கியம் I : வல்லின மெய்களின் மேல் ஊர்ந்து வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரை மாத்திரையில் ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும்.
வாக்கியம் II : கு, சு, டு, து, பு, று என்பவை குற்றியலுகரச் சொற்கள் ஆகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
137. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
(A) வளையாபதி
(B) யசோதர காவியம்
(C) குண்டல கேசி
(D) மணிமேகலை
(E) விடை தெரியவில்லை
138. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது ?
(A) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
(B) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
(C) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
(D) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
(E) விடை தெரியவில்லை
139. பொருத்துக.
I. குளிர்ந்த சோலைa. மத்தள ஒலியாய் எழுதல்
II. தாமரை மலர்கள்b. கண்கள் விழித்துப் பார்த்தல்
III. சூழும் மேகங்கள்c. விளக்குகள் போல் தோன்றுதல்
IV. குவளை மலர்கள்d. மயில்கள் ஆடுதல்
(A) b c d a
(B) d c a b
(C) d a b c
(D) c a d b
(E) விடை தெரியவில்லை
140. வாக்கியம் I : பூக்காமலே காய்க்கும் மரங்கள் சில உள்ளன எனச் சிறுபஞ்சமூலம் கூறுகிறது.
வாக்கியம் II : விதைகள் பாத்தி அமைத்து விதைத்தால்தான் முளைக்கும் என்கிறது இந்நூல்
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
141. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் மெய்யெழுத்துகள் எவை ?
(A) ர், ழ்
(B) ن
(C) த், ந்
(D) ட், ண்
(E) விடை தெரியவில்லை
142. வாக்கியம் I : 'கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் பாரதியார்.
வாக்கியம் II : கம்பராமாயணத்திற்கு 'இராமவதாரம்' எனப் பெயரிட்டவர் பாரதியார்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
143. வாக்கியம் I : ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிவது வெண்பாவாகும்.
வாக்கியம் II : ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது கலிப்பாவாகும்.
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
(E) விடை தெரியவில்லை
144. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது
(A) விளக்கு
(B) கல்வி
(C) விளையாட்டு
(D) பாட்டு
(E) விடை தெரியவில்லை
145. "மழையும் புயலும்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
(A) வ. ராமசாமி
(B) மு. வரதராசனார்
(C) க. சச்சிதானந்தன்
(D) சு. வெங்கடேசன்
(E) விடை தெரியவில்லை
146. 'பனைமரம்' என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?
(A) உம்மைத் தொகை
(B) வேற்றுமைத் தொகை
(C) வினைத் தொகை
(D) இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
(E) விடை தெரியவில்லை
147. திருஆலவாயிலில் உறையும் இறைவன் யார்?
(A) முருகப் பெருமான்
(B) முத்துக்குமார சாமி
(C) சிவபெருமான்
(D) பெருமாள்
(E) விடை தெரியவில்லை
148. பொருத்துக.
I. ஆரிa. சிறப்பு
II. ஊழிb. முறை
III. ஊழ்c. யுகம்
IV. பீடுd. அருமை
(A) d c b a
(B) d b a c
(C) d b a c
(D) d a c b
(E) விடை தெரியவில்லை
149. தவறான இணையை கண்டறிக.
I. திருக்குறளின் மூலத்தை அச்சிட்டவர்a. தஞ்சை ஞானப் பிரகாசர்
II. திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர்b. மணக்குடவர்
III. திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரம்c. நட்பு
IV. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்தவர்d. ஜி. யு. போப்
(A) திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு. போப்
(B) திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரம் - நட்பு
(C) திருக்குறளின் மூலத்தை அச்சிட்டவர் - தஞ்சை ஞானப் பிரகாசர்
(D) திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
(E) விடை தெரியவில்லை
150. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்ற சொல் எது ?
(A) குற்றியலுகரம்
(B) உயிரள பெடை
(C) அஃகேனம்
(D) உயிர்மெய்
(E) விடை தெரியவில்லை

📢 வாசகர் கவனத்திற்கு:
இப்பதிவில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தயவுசெய்து வினா எண்ணுடன் கீழே உள்ள Comment பகுதியில் சுட்டிக்காட்டவும். அது உடனடியாகத் திருத்தப்படும்.

Disclaimer: The materials provided in this post on Ezhuthumai, including previous year question papers, are intended solely for educational purposes and competitive exam preparation. We are not officially affiliated with any government testing authority or commission. While we strive to provide helpful and accurate study resources, candidates should always refer to official government websites for the most authoritative and up-to-date information regarding exams, syllabi, and answer keys.

TNPSC Group 4 Tamil 2024 Official Question Paper (Free Test)

உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று பார்க்கலாமா!

👆 இதை அழுதவும்

TNPSC வெற்றியாளராக வேண்டுமா? 🏆

மேலும் படிக்க மற்றும் Quiz பயிற்சி செய்ய கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

👉 Quiz & Study Materials

We are committed to keeping this platform free for all learners.

If this post helped you in your preparation, you can support us with a small donation. Your support motivates us to create more quality study materials.

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...