முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TNPSC Group 4 Tamil 2024 Official Question Paper (Free Test)

TNPSC Group 4 Tamil 2024 Official Question Paper | இலவச ஆன்லைன் தேர்வு (Quiz)

TNPSC Group 4 தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களே! 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வின் பொதுத்தமிழ் (General Tamil) வினாத்தாளை அப்படியே ஒரு ஆன்லைன் வினாடி-வினா (Free Online Quiz) வடிவில் இங்கே பதிவேற்றம் செய்துள்ளோம்.

அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற முந்தைய ஆண்டு வினாத்தாள்களை (Previous Year Question Papers) பயிற்சி செய்வது மிக முக்கியமான உத்தியாகும். இந்த 2024 Official Question Paper Quiz மூலம் உங்கள் தயாரிப்பு நிலையை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.


இந்த Free Online Test-ன் சிறப்பம்சங்கள்:

  • அதிகாரப்பூர்வ வினாக்கள்: 2024 தேர்வில் கேட்கப்பட்ட 100 பொதுத்தமிழ் வினாக்கள்.
  • Real-Time Results: தேர்வு முடிந்தவுடன் உங்களின் மதிப்பெண் மற்றும் சரியான விடைகளை உடனே தெரிந்து கொள்ளலாம்.
  • Time Management: நேர மேலாண்மையை வளர்த்துக் கொள்ள இது ஒரு சிறந்த பயிற்சி.
  • Mobile Friendly: உங்கள் மொபைல் அல்லது கணினியில் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தேர்வை இலவசமாக எழுதலாம்.

கீழே உள்ள வினாக்களுக்கு விடையளித்து உங்களின் தமிழ் அறிவைச் சோதித்துப் பாருங்கள்!

TNPSC Group 4 Tamil 2024 Official Question Paper (Free Test) 100% free for all

Part - A (Tamil Eligibility Cum Scoring test)

1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
(A) வந்தாள்
(B) வந்த
(C) வந்து
(D) வந்தவர்
(E) விடை தெரியவில்லை
2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
(A) வினைமுற்றுத் தொடர்
(B) எழுவாய்த் தொடர்
(C) பெயரெச்சத் தொடர்
(D) வினையெச்சத் தொடர்
(E) விடை தெரியவில்லை
3. ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை ஆகும்.
(A) கூழை எதுகை
(B) கீழ்க்கதுவாய் எதுகை
(C) ஒரூஉ எதுகை
(D) மேற்கதுவாய் எதுகை
(E) விடை தெரியவில்லை
4. இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்
(A) அகன்ற உலகம்
(B) நீர் சூழ் உலகம்
(C) மலை சூழ் உலகம்
(D) மழை தரும் உலகம்
(E) விடை தெரியவில்லை
5. பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்
(A) மானத்தை மழை காக்கும்
(B) பயிரை குணம் காக்கும்
(C) மானத்தைப் பணம் காக்கும்
(D) உயிரைச் சொல் காக்கும்
(E) விடை தெரியவில்லை
6. மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
(A) கண் - பண்ணோடு
(B) நந்தவனம் - நற்றமிழ்
(C) பண்ணோடு - வந்தாயோ
(D) திறந்து - நற்றமிழ்
(E) விடை தெரியவில்லை
7. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
(A) பயனற்ற செயல்
(B) தற்செயல் நிகழ்வு
(C) தடையின்றி மிகுதியாக
(D) ஒற்றுமையின்மை
(E) விடை தெரியவில்லை
8. விடைக்கேற்ற வினா அமைக்க.
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
(A) தல புராணங்கள் என்றால் என்ன?
(B) தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
(C) மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
(D) தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
(E) விடை தெரியவில்லை
9. செந்தமிழ் - இலக்கணக் குறிப்பு தருக.
(A) ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
(B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
(C) பண்புத் தொகை
(D) வினைத் தொகை
(E) விடை தெரியவில்லை
10. 'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
(A) மாறனலங்காரம்
(B) தண்டியலங்காரம்
(C) திவாகர நிகண்டு
(D) பிங்கல நிகண்டு
(E) விடை தெரியவில்லை
11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
(A) வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
(B) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகு வார்
(C) இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
(D) வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
(E) விடை தெரியவில்லை
12. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
(A) கூரை வேய்ந்தனர்
(B) கூரை முடைந்தனர்
(C) கூரை செய்தனர்
(D) கூரை வனைந்தார்
(E) விடை தெரியவில்லை
13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) செப்பல் ஓசை
(B) துள்ளல் ஓசை
(C) அகவல் ஓசை
(D) ஓங்கல் ஓசை
(E) விடை தெரியவில்லை
14. எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்
(A) ஆர்வம்
(B) உற்சாகம்
(C) சோர்வு
(D) தெளிவு
(E) விடை தெரியவில்லை
15. பிரித்து எழுதுக :
'நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
(A) நீளு + உழைப்பு
(B) நீண் + உழைப்பு
(C) நீண்ட + உழைப்பு
(D) நீள் + உழைப்பு
(E) விடை தெரியவில்லை
16. படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை
(A) இணை மோனை
(B) ஒரூஉ மோனை
(C) பொழிப்பு மோனை
(D) கூழை மோனை
(E) விடை தெரியவில்லை
17. எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்
(A) செய்தி வாக்கியம்
(B) கட்டளை வாக்கியம்
(C) வினா வாக்கியம்
(D) பிறவினை வாக்கியம்
(E) விடை தெரியவில்லை
18. இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
(A) பண்புத் தொகை
(B) வினைத் தொகை
(C) வினையாலணையும் பெயர்
(D) வினைமுற்று
(E) விடை தெரியவில்லை
19. மல்லிகை சூடினாள் என்பது
(A) பண்பாகு பெயர்
(B) தொழிலாகு பெயர்
(C) பொருளாகு பெயர்
(D) காலவாகு பெயர்
(E) விடை தெரியவில்லை
20. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
(A) வலிமையற்றவர்
(B) கல்லாதவர்
(C) ஒழுக்கமற்றவர்
(D) அன்பில்லாதவர்
(E) விடை தெரியவில்லை
பிரபல கட்டுரைகள்
21. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
(A) தீக்காயம் பட்டவர்
(B) தீயினால் சுட்டவர்
(C) பொருளைக் காக்காதவர்
(D) நாவைக் காக்காதவர்
(E) விடை தெரியவில்லை
22. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
- இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
(A) உவமையணி
(B) பிறிதுமொழிதல் அணி
(C) வேற்றுமையணி
(D) தன்மையணி
(E) விடை தெரியவில்லை
23. கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
(A) வெற்றி வேற்கை
(B) அருங்கலச்செப்பு
(C) நன்னெறி
(D) ஞானக்குறள்
(E) விடை தெரியவில்லை
24. கரைபொரு - இலக்கணக் குறிப்பு வரைக.
(A) ஆறாம் வேற்றுமை தொகை
(B) இரண்டாம் வேற்றுமை தொகை
(C) உவமைத் தொகை
(D) பண்புத் தொகை
(E) விடை தெரியவில்லை
25. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
(A) திரு. கால்டுவெல்
(B) திரு. ஜி.யு. போப்
(C) திரு. வீரமாமுனிவர்
(D) திரு. சீகன்பால்கு
(E) விடை தெரியவில்லை
26. "வலவன் ஏவா வானூர்தி” - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) குறுந்தொகை
(E) விடை தெரியவில்லை
27. புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
(A) டாக்டர். கால்டுவெல்
(B) ஜி.யு. போப்
(C) பெர்சிவல் பாதிரியார்
(D) ஜார்ஜ் எல். ஹார்ட்
(E) விடை தெரியவில்லை
28. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
(A) அருளப்பன்
(B) யோவான்
(C) சந்தாசாகிப்
(D) சன்னியாசி
(E) விடை தெரியவில்லை
29. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
(A) இயேசு
(B) மரியாள்
(C) யூதாஸ்
(D) வளன்
(E) விடை தெரியவில்லை
30. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
(A) தொண்டை நாடு
(B) சேர நாடு
(C) பாண்டிய நாடு
(D) சோழ நாடு
(E) விடை தெரியவில்லை
31. "சேரிமொழியாற் செவ்விதிற்
கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே" -
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
(A) தூது
(B) குறவஞ்சி
(C) கலம்பகம்
(D) பள்ளு
(E) விடை தெரியவில்லை
32. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
(A) பள்ளு
(B) தூது
(C) குறவஞ்சி
(D) கலம்பகம்
(E) விடை தெரியவில்லை
33. சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(A) குடக்கூத்து
(B) தெருக்கூத்து
(C) சக்திக்கரகம்
(D) உடுக்கை ஆட்டம்
(E) விடை தெரியவில்லை
34. 'யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்றவர்
(A) அகத்தியர்
(B) திருமூலர்
(C) கடுவெளிச் சித்தர்
(D) பாரதியார்
(E) விடை தெரியவில்லை
35. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) குதம்பைச் சித்தர்
(C) அழுகுணிச் சித்தர்
(D) கடுவெளிச் சித்தர்
(E) விடை தெரியவில்லை
36. 'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
(A) உ.வே. சாமிநாதர்
(B) மு.வரதராசனார்
(C) வ.சுப. மாணிக்கனார்
(D) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
(E) விடை தெரியவில்லை
37. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
(A) மு. வரதராசனார்
(B) ம.பொ. சிவஞானம்
(C) திரு.வி. கலியாணசுந்தரனார்
(D) சி.என். அண்ணாதுரை
(E) விடை தெரியவில்லை
38. தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்
(A) அகத்தியலிங்கம்
(B) ஹோக்கன்
(C) கால்டுவெல்
(D) பிரான்ஸிஸ் எல்லிஸ்
(E) விடை தெரியவில்லை
39. "தாதாசாகேப் பால்கே" விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
(A) 1965
(B) 1969
(C) 1990
(D) 1996
(E) விடை தெரியவில்லை
40. "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
(A) சங்கரதாசு சுவாமிகள்
(B) ந. முத்துசாமி
(C) பம்மல் சம்பந்த முதலியார்
(D) கோமல் சுவாமிநாதன்
(E) விடை தெரியவில்லை
41. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது .
(A) அண்ணா நூற்றாண்டு நூலகம்
(B) திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
(C) கன்னிமாரா நூலகம்
(D) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
(E) விடை தெரியவில்லை
42. மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
(A) கீழ்க்காய்நெல்லி
(B) கீழாநெல்லி
(C) கீழ்வாய்நெல்லி
(D) இவை மூன்றும்
(E) விடை தெரியவில்லை
43. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
(A) அலைவாய்க் கரையில்
(B) கரிப்பு மணிகள்
(C) ஒரு கடலோர கிராமம்
(D) சேற்றில் மனிதர்கள்
(E) விடை தெரியவில்லை
44. 'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
(A) மா. இராமலிங்கம்
(B) ப.சிங்காரம்
(C) ஜெயகாந்தன்
(D) பிச்சாமூர்த்தி
(E) விடை தெரியவில்லை
45. முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
(A) ப. ஜீவானந்தம்
(B) திரு.வி. கலியாணசுந்தரனார்
(C) காமராசர்
(D) அறிஞர். அண்ணா
(E) விடை தெரியவில்லை
46. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
(A) விளக்கப்படம்
(B) கருத்துப்படம்
(C) செய்திப்படம்
(D) பிரசாரப்படம்
(E) விடை தெரியவில்லை
47. தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
(A) பி.எஸ். ராமையா
(B) கு.ப.ராஜகோபாலன்
(C) கல்கி
(D) புதுமைப்பித்தன்
(E) விடை தெரியவில்லை
48. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
(A) ந.முத்துசாமி
(B) கலாப்ரியா
(C) சுரதா
(D) பாவாணர்
(E) விடை தெரியவில்லை
49. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
(A) பகவத் கீதை
(B) அன்பு உள்ளம்
(C) அரிச்சந்திர நாடகம்
(D) சிரவண பிதுர்பத்தி
(E) விடை தெரியவில்லை
50. பொருத்துக :
(a) அலெக்ஸாண்டர் பெயின் (1) குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி (2) இணைய வணிகம்
(c) ஜான் - ஷெப்பர்டு பாரன் (3) கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் (4) தானியங்கிப் பண இயந்திரம்
(A) 1 3 4 2
(B) 1 4 2 3
(C) 1 3 2 4
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
51. "தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்" என்று போற்றப்படுபவர்.
(A) சச்சிதானந்தன்
(B) ஆறுமுகநாவலர்
(C) சி.வை.தாமோதரனார்
(D) உ.வே.சாமிநாதர்
(E) விடை தெரியவில்லை
52. கூற்று 1: மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி.
கூற்று 2: அக்கூட்டத்தில் "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று ம.பொ.சி. முழங்கினார்
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
(D) இரு கூற்றுகளும் தவறு
(E) விடை தெரியவில்லை
53. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலையை" அமைத்தவர்
(A) தேவநேயப்பாவாணர்
(B) இரா. இளங்குமரனார்
(C) ம. பொ. சிவஞானம்
(D) காயிதே மில்லத்
(E) விடை தெரியவில்லை
54. இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?
(A) இராமேஸ்வரம் கோயில்
(B) பல்லவ குடைவரைக் கோயில்
(C) மதுரை மீனாட்சி கோயில்
(D) இராசசிம் மேச்சுரம் கோயில்
(E) விடை தெரியவில்லை
55. குந்தி தின்றால் குன்றும் கரையும் என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.
(A) பயனற்ற சொல்
(B) உழைக்காதவன் செல்வம் அழியும்
(C) எளிதில் மனதில் பதித்தல்
(D) தற்செயல் நிகழ்வு
(E) விடை தெரியவில்லை
56. அகர வரிசைப்படுத்துக
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி
(A) தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
(B) உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி
(C) படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம், கணப்பறை, தவில்
(D) நாகசுரம், கணப்பறை, உடுக்கை, தவில், மகுடி, படகம்
(E) விடை தெரியவில்லை
57. "மனக்குரங்கு" என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.
(A) உருவகம்
(B) வினையெச்சம்
(C) உவமைத்தொகை
(D) உரிச்சொற்றொடர்
(E) விடை தெரியவில்லை
58. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) கடல்
(B) ஆழி
(C) பரவை
(D) ஆறு
(E) விடை தெரியவில்லை
59. பிழை திருத்தம் செய்க.
(A) மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
(B) மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
(C) மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
(D) மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
(E) விடை தெரியவில்லை
60. பிழை திருத்தம் செய்க.
(A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
(D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
(E) விடை தெரியவில்லை
61. பிறவினைச் சொற்களைக் கண்டறிக.
(A) நனைந்தான், படித்தான்
(B) திருத்தினான், நனைந்தான்
(C) வருவித்தான், திருத்தினான்
(D) படித்தான், வருவித்தான்
(E) விடை தெரியவில்லை
62. பின்வரும் தொடரைக் கண்டறிக.
பூங்குழலி யாழ் மீட்டினாள்'
(A) எதிர்மறைத் தொடர்
(B) செய்வினைத் தொடர்
(C) செயப்பாட்டு வினைத் தொடர்
(D) விழைவுத் தொடர்
(E) விடை தெரியவில்லை
63. விடைக்கேற்ற வினா அமைத்தல்.
வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.
(A) வணிக அறிவியல் என்றால் என்ன?
(B) எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?
(C) வணிக அறிவியல் முதலீட்டைப் பெறுவதற்கு பொருள்களை கண்டுபிடிக்கிறதா?
(D) எந்த முதலீட்டை பெருக்க வேண்டும்?
(E) விடை தெரியவில்லை
64. அகர வரிசைப்படுத்துக.
கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்
(A) கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து
(B) சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து
(C) கேள்வர்,சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை
(D) கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை
(E) விடை தெரியவில்லை
65. தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்.
(A) தந்து
(B) தந்த
(C) தந்தது
(D) தந்தவர்
(E) விடை தெரியவில்லை
66. வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
மலர் வீட்டுக்குச் சென்றாள்.
(A) சென்ற
(B) செல்ல
(C) செல்
(D) சென்று
(E) விடை தெரியவில்லை
67. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
சூல், சூழ், சூள்
(A) கருப்பம், சுற்று, சபதம்
(B) சபதம், சுவர், தானியம்
(C) ஆலோசனை, ஆணை, வாயில்
(D) ஆணை, முற்றுகையிடு, சருமம்
(E) விடை தெரியவில்லை
68. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A) எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்
(B) எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது
(C) எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்
(D) எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
(E) விடை தெரியவில்லை
69. கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக.
(I) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
(II) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
(III) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்
(A) (I) தவறு (II) சரி (III) சரி
(B) (I) சரி (II) தவறு (III) சரி
(C) (I) சரி (II) தவறு (III) தவறு
(D) (I) தவறு (II) சரி (III) சரி
(E) விடை தெரியவில்லை
70. வெண்பா-வுக்குரிய ஓசை
(A) துள்ளல்
(B) தூங்கல்
(C) அகவல்
(D) செப்பல்
(E) விடை தெரியவில்லை
71. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
(a) முல்லைப்பாட்டு - 1. கண்ணதாசன்
(b) காசிக்காண்டம் - 2. இளங்கோவடிகள்
(c) சிலப்பதிகாரம் - 3. நப்பூதனார்
(d) காலக்கணிதம் - 4. அதிவீரராமப்பாண்டியர்
(A) 1 2 3 4
(B) 3 4 2 1
(C) 2 4 3 1
(D) 2 3 1 4
(E) விடை தெரியவில்லை
72. ஐ - எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
(A) அரசன்
(B) வீரன்
(C) ஒற்றன்
(D) தலைவன்
(E) விடை தெரியவில்லை
73. Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்
(A) வனைவு
(B) புனைவு
(C) புதுமை
(D) வளைவு
(E) விடை தெரியவில்லை
74. "கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும் - பாரதியார்.
இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.
(A) திணை வழுவமைதி
(B) பால் வழுவமைதி
(C) மரபு வழுவமைதி
(D) இட வழுவமைதி
(E) விடை தெரியவில்லை
75. மணிமொழிக்கோவை - அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.
(A) இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது
(B) நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
(C) இன்னா நாற்பது,நாலடியார், நான்மணிக்கடிகை
(D) பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
(E) விடை தெரியவில்லை
76. பதினெண் என்றால்
(A) 18
(B) 20
(C) 11
(D) 17
(E) விடை தெரியவில்லை
77. 'இனியவை நாற்பது' பாடலின் ஆசிரியர் யார்?
(A) நப்பசலையார்
(B) பூதஞ்சேந்தனார்
(C) பூங்குன்றனார்
(D) குடப்புலவியனார்
(E) விடை தெரியவில்லை
78. "பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும் - இவ்வடியில் பூவையும் என்பது குறிக்கும்.
(A) மயில்கள்
(B) பெண்கள்
(C) நாகணவாய்ப் பறவைகள்
(D) மரங்கொத்திப் பறவைகள்
(E) விடை தெரியவில்லை
79. 'உத்தர காண்டம்' எழுதியவர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) கம்பர்
(C) வில்லிபுத்தூரார்
(D) புகழேந்தி
(E) விடை தெரியவில்லை
80. "பாடை மாக்கள்" என அழைக்கப்படுபவர்கள் யாவர்?
(A) சமயத் தத்துவவாதிகள்
(B) பல மொழி பேசும் மக்கள்
(C) படை வீரர்கள்
(D) வணிகர்கள்
(E) விடை தெரியவில்லை
81. பொருத்துக.
(a) மணிமேகலை - 1. சேக்கிழார்
(b) சிலப்பதிகாரம் - 2. சீத்தலைச்சாத்தனார்
(c) பெரியபுராணம் - 3. பரஞ்சோதி முனிவர்
(d) திருவிளையாடற் புராணம் - 4. இளங்கோவடிகள்
(A) 3 4 1 2
(B) 2 4 1 3
(C) 2 1 4 3
(D) 1 2 3 4
(E) விடை தெரியவில்லை
82. 'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது' - என அழைக்கப்படும் காப்பியம் எது?
(A) கம்பராமாயணம்
(B) பெரியபுராணம்
(C) சீவகசிந்தாமணி
(D) சிலப்பதிகாரம்
(E) விடை தெரியவில்லை
83. "ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும் " இவ்வடியில் நீப வனம் என்பது
(A) கடம்பவனம்
(B) உவவனம்
(C) பாலைவனம்
(D) மலர்வனம்
(E) விடை தெரியவில்லை
84. பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று
(A) குடும்ப விளக்கு
(B) மருமக்கள் வழி மாண்மியம்
(C) குயில் பாட்டு
(D) சீறாப்புராணம்
(E) விடை தெரியவில்லை
85. 'வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு'
எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
(A) சொக்கநாதர் பலபட்டடையார்
(B) அழகிய சொக்கநாதர்
(C) கவி காளமேகம்
(D) குமரேசர்
(E) விடை தெரியவில்லை
86. சரியானதைக் கண்டறிக.
(I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
(II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
(III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
(IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
(A) (I) மற்றும் (II)
(B) (I), (II), (III)
(C) (I), (II), (IV) சரி
(D) அனைத்தும் சரி
(E) விடை தெரியவில்லை
87. 'திருவிருத்தம்' என்ற நூலின் ஆசிரியர்
(A) நம்மாழ்வார்
(B) திருப்பாணாழ்வார்
(C) மதுரகவியாழ்வார்
(D) பேயாழ்வார்
(E) விடை தெரியவில்லை
88. 'திருக்கேதாரப் பதிகத்தைப் பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை
89. மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்
(A) திருப்பாவை
(B) திருவாய்மொழி
(C) நாச்சியார் திருமொழி
(D) தேவாரம்
(E) விடை தெரியவில்லை
90. 'தமிழ்ப் பெருங்காவலர்' என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
(A) மறைமலையடிகள்
(B) பேரா. தனிநாயகம்
(C) தேவநேயப்பாவாணர்
(D) உ.வே.சாமிநாதர்
(E) விடை தெரியவில்லை
91. 'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' - என்று கூறியவர் யார்?
(A) அண்ணல் அம்பேத்கர்
(B) முனைவர். எமினோ
(C) காந்தியடிகள்
(D) ஜி.யு. போப்
(E) விடை தெரியவில்லை
92. தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.
(A) வாணிதாசன்
(B) உவமைக் கவிஞர் சுரதா
(C) மு. மேத்தா
(D) ஈரோடு தமிழன்பன்
(E) விடை தெரியவில்லை
93. 'பகுத்தறிவுக் கவிஞர்' என்று புகழப்படுபவர் யார்?
(A) கவியரசர் கண்ணதாசன்
(B) உடுமலை நாராயண் கவி
(C) கவிச்சக்கரவர்த்தி கம்பர்
(D) கவிவேந்தர் மு. மேத்தா
(E) விடை தெரியவில்லை
94. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்
(A) மகாகவி பாரதியார்
(B) கவிஞர் வாணிதாசன்
(C) பாவேந்தர் பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
(E) விடை தெரியவில்லை
95. திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது
(A) நாற்பது அடி உயரத்தில்
(B) அறுபது அடி உயரத்தில்
(C) ஆறு அடி உயரத்தில்
(D) நான்கு அடி உயரத்தில்
(E) விடை தெரியவில்லை
96. சரியானவற்றைப் பொருத்துக.
(a) அக்ஷராப்பியாசம் - 1. தாழை மடல்
(b) வித்தியாப்பியாசம் - 2. கல்விப் பயிற்சி
(c) வித்தியாரம்பம் - 3. எழுத்துப் பயிற்சி
(d) சீதாள பத்திரம் - 4. கல்வித் தொடக்கம்
(A) 2 3 1 4
(B) 1 3 4 2
(C) 4 1 3 2
(D) 3 2 4 1
(E) விடை தெரியவில்லை
97. "எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு'- என்று கூறிய தமிழறிஞர்
(A) மறைமலையடிகள்
(B) ம. பொ. சிவஞானம்
(C) தேவநேயப்பாவாணர்
(D) பரிதிமாற்கலைஞர்
(E) விடை தெரியவில்லை
98. படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்
(A) நாடகம்
(B) கதை
(C) கவிதை
(D) கட்டுரை
(E) விடை தெரியவில்லை
99. தேர்ந்தெடுத்து எழுதுக.
'மக்கள் கவிஞர்' என்றழைக்கப்படுபவர் 'பகுத்தறிவுக் கவிராயர்' என்றழைக்கப்படுவர் முறையே,
(A) வாணிதாசன் - பெருஞ்சித்திரனார்
(B) பாரதியார் - கண்ணதாசன்
(C) ந. பிச்சமூர்த்தி - மு.மேத்தா
(D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - உடுமலை நாராயண கவி
(E) விடை தெரியவில்லை
100. தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்
(B) இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்
(C) உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
(D) கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நூலகமாகும்
(E) விடை தெரியவில்லை

📢 வாசகர் கவனத்திற்கு:
இப்பதிவில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தயவுசெய்து வினா எண்ணுடன் கீழே உள்ள Comment பகுதியில் சுட்டிக்காட்டவும். அது உடனடியாகத் திருத்தப்படும்.

Disclaimer: The materials provided in this post on Ezhuthumai, including previous year question papers, are intended solely for educational purposes and competitive exam preparation. We are not officially affiliated with any government testing authority or commission. While we strive to provide helpful and accurate study resources, candidates should always refer to official government websites for the most authoritative and up-to-date information regarding exams, syllabi, and answer keys.

TNPSC Group 4 General English 2019 Official Question Paper

உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று பார்க்கலாமா!

👆 இதை அழுதவும்

TNPSC வெற்றியாளராக வேண்டுமா? 🏆

மேலும் படிக்க மற்றும் Quiz பயிற்சி செய்ய கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

👉 Quiz & Study Materials

We are committed to keeping this platform free for all learners.

If this post helped you in your preparation, you can support us with a small donation. Your support motivates us to create more quality study materials.

கருத்துகள்

📚 Ezhuthumai - TNPSC Exam Booster Join Free WhatsApp Channel
JOIN NOW

Popular

ராஜாராணி - சாக்ரடீஸ் - ஓரங்க நாடகம்

திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது.   கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...

ஒளவையார் தனிப்பாடல்: வான்குருவியின் கூடு

English Summary: This post discusses Avvaiyar’s reflective poem "Vaan Kuruviyin Koodu" (The Nest of the Sky Bird), which explores themes of simplicity, detachment, and the impermanence of material life. Through the imagery of a bird’s nest, Avvaiyar conveys deep philosophical insights about living with minimal needs and embracing spiritual freedom. ஆசிரியர் அறிமுகம்: ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு காலகட்டங்களில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களைச் சரியான முறையில் பகுத்தறிவது கடினமான சூழலாக உள்ளது. எனவே, நூல்கள் பதிப்பிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளவையாரின் காலப் பாகுபாட்டை அடையாளம் காண்கின்றனர். அதையொட்டி, தனிப்பாடல் இயற்றிய ஔவையாரின் காலம் கி.பி.12 ஆவது நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. உதிரிகளாகக் கிடந்த பாடல்களைத் தொகுத்து 'தனிப்பாடல் திரட்டு' என்ற பெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 74 பாடல்கள் ஒளவையாரின் பாடல்கள் ஆகும். தனிப்பாடல் எனப் பிரிப்பதன் காரணம், பின்னால் வந்த பாடல்கள் என்று அடையாளம் காணவே எனலாம். சங்க இலக்கியம் தொடங்கி த...

பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார்

Bharatha Samudhayam Vaazhgave – Bharathiyar  ஆசிரியர் அறிமுகம் எட்டையபுரத்தில் தமிழ்த்தாயின் தவத்தால் தோன்றிய மாமனிதர் இவர். காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தில் கருக்களிலும் சொல்லுகிற முறைமையிலும் புதுமையைப் புகுத்தி, தாய்மொழியின் வாழ்வில் மெருகைச் சேர்த்தவர். இந்திய நாட்டில் அரசியல், சமூக, ஆன்மீக விடுதலைக்காக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர். தாய்மொழித் தமிழை உலகறியச் செய்யப் பேரவாக் கொண்டவர். கடினமானது என்று கருதப்பட்ட மரபுக் கவிதைகளை எளிமைப்படுத்தியவர் பாரதி, இவரது கவிதைகள் சாதாரண பாமரரும் புரிந்து கொள்ளத் தக்கவை. இனிய ஓசையுடன் நாட்டுப்புறப் பாடல் சாயலில் சிந்து, கண்ணி நடையைத் தாராளமாகத் தம் படைப்புகளில் இவர் கையாண்டார். தேசிய விடுதலை, பெண் விடுதலை, சாதிக் கொடுமை ஆகியன இவரது கவிதைகளின் முக்கியப் பாடுபொருள்களாக அமைந்தன. கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், இதழியலாளர். சமூக சீர்திருத்தவாதி என்னும் பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் கவிதைகளில் 'பாரத சமுதாயம்' என்னும் தலைப்பிலான கவிதை இங்கு பாடப்பகுதியாக அமைந்துள்ளது. அதனை இங்கு விரிவாகக் காண்போம். பாரதியார் பாடல் குறிப்பு சமுதாயம் என்பதற்...

முதல் நூற்பா கட்டுரை - கலைஞர் மு. கருணாநிதி

நூல் அறிமுகம் தொல்காப்பியப்பூங்கா என்ற நூலைப் படைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழ் மொழியில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றி எழுந்துள்ளன. அவற்றுள் நமக்குக் கிடைத்த முதன்மையும் பழமையுமானது தொல்காப்பியம் ஆகும். இது தமிழ்மொழியின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூலாகும். எனினும் தமிழர் தம் மரபு, பண்பு, தொன்மை, வாழ்வு, சிறப்பு ஆகியனவற்றையும் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியம் படித்தோர் மட்டுமே அதிகம் அறிந்த இந்நூலை அனைவரும் அறிய உதவும் திறவுகோலாகத் 'தொல்காப்பியப் பூங்கா' அமைந்துள்ளது. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரத்திலிருந்து சில நூற்பாக்களை எடுத்துக் கொண்டு கலைஞர் எளிய விளக்கவுரை தந்துள்ளார். இவ்வுரை எளிய சுவையான கதைக் குறிப்புகளைக் கொண்டு ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் அமைந்துள்ளது. நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கக் குறிப்புகளுடன் அமைந்ததும் குறிப்பிடத்தகுந்ததாகும். தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வந்திருப்பினும், இது வேறுபட்டதாகும். கலைஞரின் திராவிடச் சிந்தனையும் இலட்சியங்களும் இதில் இணைந்துள்ளது. தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் கல...

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – கட்டுரை

முகப்பு › 1st Year - Tamil › புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து கட்டுரை. தோற்றமும் வளர்ச்சியும் 1930-45 மணிக்கொடியும், 1950 முதல் 1970 வரை எழுத்துப் பரம்பரையும், 1971 முதல் வானம்பாடியும் புதுக்கவிதை உலகை ஆக்கிரமித்தன. வால்ட் விட்மனும், எஸ்ராபவுண்டும், பிரான்ஸ் நாட்டின் ரிம்போவும் வெளிப்படுத்திய இப்புதிய கவிதை உலகத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய இருவர் பாரதியும், பிச்சமூர்த்தியும். இவர்கள் காலந்தான் புதுக்கவிதையின் தொடக்ககாலம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இவர்களால் தமிழ்க்கவிதை உலகில் 'இதுதான் கவிதை' எனும் இலக்கணம் மாறியது. எதுதான் கவிதை இல்லை? எனும் புது இலக்கணம் உருவாகியது. இதனை ந.வீ.செயராமன் 'மனம் என்னும் இருட்டறைக்குள் முடங்கி முடமாகக் கிடந்த கற்பனைகள் வானம்பாடிகளாய்ச் சிறகடித்து இலக்கிய வானில் பறக்கின்றன இன்றைய புதுக்கவிதையாய். உலகின் அப்பட்டமான உண்மை நிலை இது என்பர். புதுக்கவிதை படைத்தோர் பாரதியார் பாரதியின் வசன கவிதை புதிய முயற்சி எனும் வகையில் வரவேற்கத்தக்கது. 'எல்லா உயிரும் இன்பமெய்துக! எல...