திரைப்பட அறிமுகம் பெண்ணுரிமை பேசும் படமாக ராஜாராணி திரைப்படம் அமைந்துள்ளது. கலைஞர் கதை வசனம் எழுதி சிவாஜிகணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் நடிப்பில் வெளிவந்த படம் இது. பீம்சிங் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு டி.ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். 1956-இல் இப்படம் வெளியானது. கதைச்சுருக்கம் பால்யவிவாகம், விதவைத்திருமணம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியானது ராஜாராணித் திரைப்படம். எலெக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கும் ராஜாவாக சிவாஜியும், சிறுவயதில் விதவையான ஏழைப் பெண் ராணியாக பத்மினியும் நடித்துள்ளனர். ராணி, விதவையாக இருப்பது இவர்களின் காதலுக்கு தடையாக அமைகிறது. எஸ்.எஸ்.ஆரின் பெண்ணாசை பத்மினிக்கு வெறுப்பைத் தருகிறது. சிவாஜியின் பெண்ணை மதிக்கும் பாங்கு பத்மினியின் உள்ளத்தைக் கவருகிறது. பத்மினி ஏற்கனவே மணமாகி விதவையானவள் என்பதை எஸ்.எஸ்.ஆர். மூலம் அறிந்து சிவாஜி பத்மினியை விட்டு விலகுகிறார். ஆவவே பத்மினி தற்கொலைக்கு முயல NSK (சமரசம் செய்து) அதைத் தடுக்கிறார். இறந்தவளைப்போல பத்மினியை நடிக்கச் செய்து பத்மினியின் காதலனுக்கும் தந்தைக்கும் புத்திப்புகட்டி காதலர்களை ஒன்றிணைய வைக்க...
Ace your TNPSC, RRB, and SSC exams with Ezhuthumai! Download free study materials, comprehensive MCQs, and high-quality PDF notes. We are your all-in-one platform for competitive exam prep, plus school and college guides.